சாலையில் வண்டி ஓட்டும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வண்டியை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் என்பது கட்டாய தேவை . அப்படி ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த பணத்தில் 3 பேருக்கு ஓட்டுநர் உரிமத்தையே பெற்று விடலாம். அவ்வளவு தான் ஆகும்.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதற்படி 'பழகுநர் உரிமம்' என்று சொல்லப்படும் 'LLR' பெறுவது அவசியம். LLR பெறுவதற்கு லீவு போட்டு RTO அலுவலகம் செல்ல தேவை இல்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு மட்டும் போனால் போதும் . LLR ஐ வீட்டில் இருந்தபடியே எளிதாக விண்ணப்பித்து விடலாம். 1 மணி நேர வேலை தான். அதன் படிநிலைகளை உங்களுக்கு சொல்கிறோம்.
LLR ஐ ஆன்லைனில் விண்ணப்பிக்க ......
முதலில் மத்திய அரசின் அதிகாரபூர்வ https://parivahan.gov.in/parivahan/ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அதில் LLR விண்ணப்பம் தான் முதலில் இருக்கும் அதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் எந்த பிரிவின் கீழ் நீங்கள் LLR விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை உள்ளிட வேண்டும். பொது மக்கள், வெளிநாட்டு மக்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், மாற்றுத் திறனாளிகள், அகதிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்ற ஆப்ஷன்களில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.
அதன் பின்பு உங்கள் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்தால் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். ஓடிபி பதிவிட்டு கீழே உள்ள Terms And Conditions - ஐ டிக் செய்து விட்டு சமர்ப்பிக்கவும்.
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ஆதாரில் உள்ள பெயர் , முகவரி, புகைப்படம் என அனைத்து விவரங்களும் அதில் காண்பிக்கப்படும். விவரங்களை சரிபார்த்து சமர்ப்பித்தால் அடுத்து திறக்கும் திரையில் உங்களுடைய மொபைல் நம்பர், மெயில் ஐடி மற்றும் அங்க அடையாளங்கள் ஏதேனும் இரண்டு, ரத்த வகை ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
அதன் பின்பு உங்களுக்கு எந்த வகையான லைசென்ஸ் தேவை என்பது கேட்கப்படும். கியர் உள்ள வண்டி அல்லது கியர் இல்லாத வண்டி, நான்கு சக்கரம், கனரக வாகனம் என எது தேவையோ அதை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் மொபைல் போனுக்கு உங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்ட் வந்துவிடும். முகப்பு பக்கத்திற்கு மீண்டும் சென்று அதில் உள்ள கம்ப்ளீட் யுவர் பெண்டிங் அப்ளிகேஷன் என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு வரும் பக்கத்தில் உங்களுடைய அப்ளிகேஷன் நம்பர் கொடுத்து ஒகே கொடுக்கவும். LLR விண்ணப்ப கட்டணம் ரூ. 230 மட்டும் செலுத்த வேண்டும்.
கட்டியபின், tutorial for LL test என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் விண்ணப்ப எண் கொடுத்தவுடன் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி பதிவிட்டு சமர்பிக்கவும்
இதையும் படிங்க: எல்.ஐ.சி. பாலிசி விவரங்களை உங்கள் வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. வழிமுறை இதுதான்!
அடுத்து ஓர் வீடியோ உங்களுக்கு திரையில் தோன்றும் அந்த 30 நிமிட வீடியோவை நீங்கள் எந்தவித ஸ்கிப்பும் செய்யாமல் முழுமையாக பார்க்க வேண்டும்.
அடுத்து மீண்டும் முகப்பு சென்று அதில் ஆன்லைன் online LL test என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு 10 கேள்வி பதில் கேட்கப்படும் அதனை சரியாக கிளிக் செய்தவுடன் "உங்கள் எல் எல் ஆர் தயார்" என உங்கள் மொபைல் போனுக்கு மெசஜ் வரும்
அடுத்து முகப்பு பக்கம் சென்று எல் எல் ஆர் பிரிண்ட் என்பதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம் அவ்வளவுதான் 30 நாட்கள் வண்டி ஓட்ட பழகிவிட்டு லைசென்ஸ் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Driving License