ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இயற்கை எரிவாயுவால் இயங்கும் கார்... அறிமுகப்படுத்தி அசத்திய மாருதி நிறுவனம்

இயற்கை எரிவாயுவால் இயங்கும் கார்... அறிமுகப்படுத்தி அசத்திய மாருதி நிறுவனம்

இயற்கை எரிவாயுவால் இயங்கும் காரை அறிமுகப்படுத்திய மாருதி

இயற்கை எரிவாயுவால் இயங்கும் காரை அறிமுகப்படுத்திய மாருதி

ஜப்பானை சேர்ந்த லெக்ஸஸ் (Lexus ) நிறுவனம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான எல்.எக்ஸ் 500 டி மற்றும் ஆர்.எக்ஸ் (RX) எஸ்யுவி-களை காட்சிப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லியில் ஜனவரி 18 வரை நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சியில், மாருதி நிறுவனம் தான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய காரை காட்சிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது.

டெல்லி அருகே கிரேடர் நொய்டாவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச "ஆட்டோ எக்ஸ்போ" நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி உலகின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளையும், எதிர்கால திட்டமிடல்களையும் காட்சிப்படுத்தியுள்ளன. இதில் எஸ்யுவி வகை கார்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ஜப்பானை சேர்ந்த லெக்ஸஸ் (Lexus ) நிறுவனம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான எல்.எக்ஸ் 500 டி மற்றும் ஆர்.எக்ஸ் (RX) எஸ்யுவி-களை காட்சிப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் டர்போ பெட்ரோல் இன்ஜின் வகையை சேர்ந்தவை. மாருதி நிறுவனம் காட்சிப்படுத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலால் இயங்கக் கூடிய விதாரா பிரெஸ்ஸா சிஎன்ஜி, எஸ்யுவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாருதியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 கதவுகளை உடைய ஜிம்னி வாகனமும் காண்போரை கவர்ந்திழுத்தது. டாடா நிறுவனம் சிவப்பு நிறத்திலான ஹேரியர் மற்றும் சஃபாரி டார்க் எடிஷன்களை காட்சிப்படுத்தி அசத்தியுள்ளது.

First published:

Tags: Automobile, Delhi