2021ல் டுகாடி நிறுவனம் களமிறக்கப்போகும் 12 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் என்னென்ன?

2021ல் டுகாடி நிறுவனம் களமிறக்கப்போகும் 12 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் என்னென்ன?

Ducati Bikes | டுகாடியின் மான்ஸ்டர், ஸ்க்ரேம்லர், மல்டிஸ்டிரடா, பனிகேல், டியாவல் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிரீட் ஃபைட்டர் வரிசையில் புதிய மாடல்கள் இந்த ஆண்டு களமிறக்கப்பட உள்ளன.

Ducati Bikes | டுகாடியின் மான்ஸ்டர், ஸ்க்ரேம்லர், மல்டிஸ்டிரடா, பனிகேல், டியாவல் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிரீட் ஃபைட்டர் வரிசையில் புதிய மாடல்கள் இந்த ஆண்டு களமிறக்கப்பட உள்ளன.

 • Share this:
  இருசக்கர வாகன நிறுவனங்களில் மிகவும் அந்தஸ்து வாய்ந்த பிராண்டாக விளங்கும் இத்தாலியை சேர்ந்த டுகாடி, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. விரிவாக சொல்வதென்றால் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமான ஆடி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் லம்போர்கினியின் துணை நிறுவனமாக டுகாடி விளங்கி வருகிறது.

  உயர் செயல்திறன் மிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் போன டுகாடி நிறுவனம் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டின் இறுதியில் பிஎஸ்-6 தரத்தில் மேம்படுத்தப்பட்ட புத்தம்புதிய பனிகேல் வி2, ஸ்க்ரேம்லர் 1100 ப்ரோ மற்றும் மல்டிஸ்டிராடா 950 எஸ் ஆகிய மாடல்களை விற்பனைக்கு களமிறக்கியது.  ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் பலரும் பந்தய விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டதன் பலனாக 2020ம் ஆண்டின் சிறந்த விற்பனையை அந்நிறுவனத்துக்கு பனிகேல் வி2 தந்தது. மேலும் பனிகேல் வி2 வெற்றிகரமான மாடலாகவும் மாறியது.

  ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் கூட ஆண்டின் இறுதியில் நல்ல எண்ணிக்கையிலான விற்பனை கிடைத்ததால் 2021ம் ஆண்டினை டுகாடி தன்னம்பிக்கையுடன் துவங்குகிறது. இந்த ஆண்டில் மட்டும் 12 புதிய மாடல்களை இந்தியாவில் இந்நிறுவனம் களமிறக்க காத்திருக்கிறது.  டுகாடியின் மான்ஸ்டர், ஸ்க்ரேம்லர், மல்டிஸ்டிரடா, பனிகேல், டியாவல் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிரீட் ஃபைட்டர் வரிசையில் புதிய மாடல்கள் இந்த ஆண்டு களமிறக்கப்பட உள்ளன.

  2021-ன் முதல் காலாண்டில் பிஎஸ்-6 ஸ்க்ரேம்ப்லர், டியாவல் மற்றும் புத்தம் புதிய எக்ஸ் டியாவல் மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

  இதன் பின்னதாக டுகாடியின் புத்தம்புதிய வி4 எஞ்சின்களை கொண்ட புதிய மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக உள்ளன. இதில் மல்டிஸ்டிராடா வி4, ஸ்டிரீட் ஃபைட்டர் வி4, MY2021 Panigale V4 போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.  இதனையடுத்து ஆண்டின் இரண்டாம் பகுதியில் சூப்பர் நேக்கட் செக்மெண்டிலான புதிய மான்ஸ்டர், சூப்பர் ஸ்போர்ட் 950, Hypermotard 950 RVE போன்ற அட்டகாசமான மாடல்கள் களமிறங்க காத்திருக்கின்றன.

  Scrambler 1100 Dark Pro, Night Shift மற்றும் Desert Sled போன்ற மாடல்கள் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.
  Published by:Arun
  First published: