Home /News /automobile /

இந்தியாவில் விலை ரூ.34.99 லட்சம்... விரைவில் அறிமுகமாகும் Ducati Streetfighter V4... அப்புடி என்ன ஸ்பெஷல்..!

இந்தியாவில் விலை ரூ.34.99 லட்சம்... விரைவில் அறிமுகமாகும் Ducati Streetfighter V4... அப்புடி என்ன ஸ்பெஷல்..!

Ducati Streetfighter V4

Ducati Streetfighter V4

Ducati Streetfighter V4 | இலகுவான சக்கரங்கள் முன்பக்கத்தில் 26 சதவிகிதம் மற்றும் பின்புறத்தில் 46 சதவிகிதம் எடையை குறைக்க உதவியதாக Ducati கூறுகிறது;

    இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி (Ducati) இந்தியாவில் சமீபத்தில் தனது ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி (Streetfighter V4 SP) பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய V4 SP பைகி இந்தியாவில் ரூ.34.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதில் SP என்பது 'ஸ்போர்ட் புரொடக்ஷன்' (Sport Production) என்பதன் சுருக்கமாகும். தற்சமயத்திற்கு டெல்லியில் உள்ள அனைத்து டுகாட்டி டீலர்ஷிப்களிலும் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 SP-ஐ புக்கிங் செய்யலாம், டெலிவரிகள் உடனடியாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Ducati இந்தியா நிர்வாக இயக்குனர் பிபுல் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் ஸ்ட்ரீட் ஃபைட்டர் குடும்பத்தை புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 SP மூலம் விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நேக்டு-பைக்கை ஓட்டி உடனடி பதிலைப் பெற விரும்பும் அமெச்சூர் பிளேயர்களுக்கு இந்த சூப்பர்-நேக்கட் ஃபரோசியஸ் பெர்ஃபார்மென்ஸ் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி பைக் சிறந்த துணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Ducati Streetfighter V4 SP-ன் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

    Streetfighter V4 SP ஆனது Streetfighter V4 S-ன் லைட்டர் வெர்ஷனாகும். இதன் எடை 196.5 கிலோ (கெர்ப்). லைட் வெயிட்டான காம்போனென்ட்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் எடை சுமார் 3 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் உள்ளதைப் போல, பைக்கில் கார்பன் விளிம்புகள் இல்லை, அதற்கு பதிலாக, இந்தியாவிற்கான ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 SP சூப்பர் பைக்கானது மார்ச்செசினி ஃபோர்ஜ்டு மெக்னீசியம் வீல்களை கொண்டுள்ளது.

    Also Read : மாஸ் காட்டி வரும் டாடா நிறுவனம்.. மொத்த விற்பனையில் 82 சதவீதம் அதிகரிப்பு.!

    இலகுவான சக்கரங்கள் முன்பக்கத்தில் 26 சதவிகிதம் மற்றும் பின்புறத்தில் 46 சதவிகிதம் எடையை குறைக்க உதவியதாக Ducati கூறுகிறது; இதன் மூலம் மோட்டார் சைக்கிளை எளிதாகவும் விரைவாகவும் திருப்ப முடியும். லித்தியம்-அயன் பேட்டரி, கார்பன்-ஃபைபர் ஹீல் கார்டு மற்றும் அனோடைஸ்டு அலுமினியம் ஃபுட் பெக்-ஸ்களின் பயன்பாடு ஆகியவை எடை சேமிப்புக்கு பங்களித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த மோட்டார் சைக்கிளில் சிறந்த செயல்திறனுக்காக பிரெம்போ ஸ்டைல்மா R® ஃப்ர்ன்ட் பிரேக் காலிப்பர்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சூப்பர் பைக் மேட் பிளாக் ஃபேரிங்ஸ் மற்றும் சிவப்பு அசெஸ்களுடன் கூடிய மேட்- ஃபினிஷ்டு விங்க்ஸ் மற்றும் ஸ்பார்க்ளிங் அலுமினிய ஃப்யூயல் டேங்கை கொண்டுள்ளது.

    இன்ஜினைப் பொறுத்த வரைDucati Streetfighter V4 SP ஸ்போர்ட்ஸ் நேக்கட் பைக்கில் , V4 S-ல் உள்ள அதே 1,103cc Desmosedici Stradale V4 இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. Ducati நிறுவனத்தின் வெப்சைடில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, "1103 cc Desmosedic Stradale இன்ஜின் கவுன்டர்-ரொட்டேடிங் கிரான்ஸ்காஃப்ட், "ட்வின் பல்ஸ்" ஃபையரிங் ஆர்டர், 208 ஹெச்பி பவர் மற்றும் 9500 ஆர்பிஎம்-மில் 123 என்எம் டார்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    மேலும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4 SP பைக்கானது டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ஸ்லைடு கன்ட்ரோல், இன்ஜின் பிரேக் கண்ட்ரோல், லாஞ்ச் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Bike

    அடுத்த செய்தி