Home /News /automobile /

ரூ.17.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டுகாட்டியின் புதிய Streetfighter V2

ரூ.17.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டுகாட்டியின் புதிய Streetfighter V2

டுகாட்டி

டுகாட்டி

Ducati Streetfighter V2 | ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-ன் அனைத்து எலெக்ட்ரானிக் கன்ட்ரோல்களையும் IMU இன்டர்ஷியல் பிளாட்ஃபார்ம் மேற்பார்வை செய்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள இத்தாலிய மோட்டார் சைக்கிள் பிராண்டான டுகாட்டி, தனது புதிய 2022 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 (Streetfighter V2) பைக்கை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய Ducati Streetfighter V2 பைக்கானது ரூ.17.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்திரா புதிய Ducati Streetfighter V2 அறிமுகம் குறித்து பேசும் போது, டுகாட்டி பிரியர்களுக்கு ஏற்ற வேடிக்கையான மற்றும் அற்புதமான ஸ்ட்ரீட் & ட்ராக் டூலாக இருக்கும். இந்த பைக் அதிநவீன கட்டிங்-எட்ஜ்-எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எளிதாக சவாரி செய்ய கூடிய அமைப்பை கொண்டுள்ளது. இதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடையகிறோம் என்றார்.

Streetfighter V2-வின் டிசைன்:

புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-வானது ஏற்கனவே இருக்க கூடிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4-ன் கிளாசிக் ஸ்டைலிஸ்டிக் காம்போனென்ட்ஸ்களை உள்ளடக்கியது. இதன் முன்புறத்தில் V-வடிவ LED DRL உள்ளது. ஹெட்லைட்கள் மற்றும் ஏர் இன்டேக் ஆகியவற்றை டபுள் லேயர் ஃபேரிங் ஒருங்கிணைக்கிறது. இந்த பைக் 178 கிலோ எடையை கொண்டுள்ளது. இந்த எடையானது முன்பக்கத்தில் 52 சதவீதமும், பின்பக்கத்தில் 48 சதவீதம் என்கிற விகிதத்தில் இருக்கிறது. முன்புறத்தில் 43மிமீ ஷோவா ஃபோர்க்ஸ், பின்புறத்தில் முழுமையாக சாக்ஸ் ஷாக் அப்சார்பர் உள்ளது. இதன் சீட் 845 மிமீ உயரம் கொண்டது.



டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-வின் எஞ்சின் அம்சங்கள்:

புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2 பைக்கானது 955cc Superquadro ட்வின் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 10,750 rpm-ல் 153 hp மற்றும் 9,000 rpm-ல் 101.4 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. மேலும் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் மற்றும் குயிக் ஷிஃப்டருடன் (quick shifter) இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட டை-காஸ்ட் அலுமினிய மோனோகோக் சேஸிஸ் மற்றும் சிங்கிள்-சைடட் ஸ்விங்கார்ம் உள்ளது.

Also Read : இந்தியாவில் களம் இறங்குகிறது மெக்லாரன்.. சூப்பர் கார்கள் வரிசையில் மற்றுமொரு சேர்க்கை!

எலெக்ட்ரானிக் பேக்கேஜ்:

ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-ன் அனைத்து எலெக்ட்ரானிக் கன்ட்ரோல்களையும் IMU இன்டர்ஷியல் பிளாட்ஃபார்ம் மேற்பார்வை செய்கிறது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-ல் உள்ள எலெக்ட்ரானிக் பேக்கேஜ் பின்வருமாறு:

1. ஏபிஎஸ் கார்னரிங் EVO

2. டுகாட்டி ட்ராக்ஷன் கன்ட்ரோல் (DTC) EVO 2

3. டுகாட்டி வீலி கன்ட்ரோல் (DWC) EVO

4. டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப்/டவுன் (DQS) EVO 2

5. என்ஜின் பிரேக் கன்ட்ரோல் (EBC) EVO

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

ரைடிங் மோட்ஸ்:

இந்த பைக் ஸ்போர்ட், ரோட், வெட் உள்ளிட்ட 3 ரைடிங் மோட்ஸ்களை கொண்டுள்ளது. இந்த ரைடிங் மோட்ஸ் பின்வரும் 3 பவர் மோட்ஸ்களுடன் தொடர்புடையவை: ஹை மோட் வித் ஃபுல் டார்க் கர்வ், மீடியம் மோட் வித் சாஃப்டென்ட் டார்க் கர்வ், லோ மோட் வித் லிமிட்டட் பவர். டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் V2-க்கான புக்கிங்ஸ் இப்போது டெல்லி - என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள அனைத்து டுகாட்டி டீலர்ஷிப்களிலும் ஓபன் செய்யப்பட்டுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி