துபாயில் ஓட்டுநர் இல்லாத டாக்சி சோதனை ஓட்டம்

Vaijayanthi S | news18
Updated: October 15, 2018, 8:54 PM IST
துபாயில் ஓட்டுநர் இல்லாத டாக்சி சோதனை ஓட்டம்
துபாயில் ஓட்டுநர் இல்லாத டாக்சி
Vaijayanthi S | news18
Updated: October 15, 2018, 8:54 PM IST
துபாயில் பேட்டரியால் இயங்கும் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவை சோதனை ஓட்டமாக செயல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் கலீத் அல் அவதி கூறுகையில், தற்பொது ஒரே ஒரு தானியங்கி டாக்ஸி மட்டுமே உள்ளது என்றும் இது ஆரம்பத்தில் துபாயில் சிலிகான் ஓசியஸில் பகுதியில் சோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 3 மாதங்கள் வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பிறகு துபாயின் மற்ற இடங்களிலும் சோதனை  செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் இ மாடலான இந்த தானியங்கி டாக்ஸியை, ரோபோக்களை தயாரிக்கும் துபாயின் சிலிகான் ஒயாசிஸ் மற்றும் டி.ஜி. வேல்ட் நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்துள்ளன. இந்த டாக்ஸி 4 சென்சார்களை கொண்டுள்ளது. வாகனத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் மற்றும் முன் பகுதியில் 3 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்த காமிராங்களின் முதல் பணி டாக்ஸிக்கு கண்களாக செயல்படுவதுதான்.  அடுத்ததாக போக்குவரத்து மற்றும் சாலை நிலைமைகளை பதிவு செய்யும் பணியை மேற்கொள்கின்றன. இதற்கிடையில், வாகனத்தை கட்டுப்படுத்த மற்றும் விபத்துகளை தவிர்க்க 400-மீட்டர் முதல் 360 டிகிரி வரை உள்ள சுற்றுப்பகுதிகளை ஸ்கேன் செய்யும் பணியையும் இந்த கேமராக்கள் செய்கின்றன. மேலும் வாகனத்தை மெதுவாகவும் அல்லது முழுமையான நிறுத்தத்திற்கும் தகுந்த சமிக்ஞையை ஆட்டோமெட்டிக் சென்சார்கள் செய்யும் வகையில் இந்த டாக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாலை மற்றூம் போக்குவரத்து ஆணையத்தின் தலைவரான மாட்டார் அல் டையர் கூறுகையில், பொது போக்குவரத்துக்காகவும் இந்த தானியங்கி சேவை பயன்படுத்தப்படும். மேலும் பொது போக்குவரத்து பயனர்கள், குறிப்பாக துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கும் வழங்கப்படும் என்றார்.

துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் யூஸெஃப் முகமத் அல் அலி கூறுகையில், 1995-ம் ஆண்டு முதல் மெர்சிடிஸ் டாக்ஸி அறிமுகப்படுத்தியதில் இருந்து துபாயில் இதுபோல தானியங்கி டாக்சிகள் அறிமுகப்படுத்தியது இதுவே முதன்முறை என்றார். மேலும் பெட்ரோல் டாக்ஸி, ஹைப்ரிட் டாக்ஸிகளுக்கு நடுவே இந்த தானியங்கி டாக்ஸி எதிர்காலத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்றும் அவர் கூறினார்.

Loading...

மேலும் 2030-ம் ஆண்டுக்குள் தானியங்கி டாக்ஸியை  25 சதவீதத்தினர் துபாயில் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தானியங்கி டாக்ஸி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் உலக வர்த்தக மையத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO WATCH...

First published: October 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...