இந்தியாவில் டிசம்பர் வரையிலான காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது என்று இந்திய வாகன உற்பத்தியாளர் சொஸைட்டி (SIAM) தெரிவித்துள்ளது. யுடிலிட்டி வாகனங்களுக்கான (யுவி) தேவை அதிகரித்த நிலையில் பயணிகள் வாகனங்களுக்கான மொத்த விற்பனை டிசம்பர் மாதம் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு டிசம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை என்பது 2,19,421 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த டிசம்பரில் இது 2,35,309 என்று அதிகரித்துள்ளது. உதிரிபாகங்களின் விநியோகம் சீரான நிலையில் இருந்த காரணத்தினாலும், வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்த நிலையிலும் வாகன விற்பனை பெருகியுள்ளது.
முன்னதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) சார்பில் சில்லறை விற்பனை தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில் 2022ஆம் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை என்பது 3.43 பில்லியனாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை கொண்டுள்ளது மற்றும் தனிநபர் நுகர்வு அளவை கணக்கிட உதவுகிறது என்பதால் வாகன விற்பனை குறித்த எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படுகிறது.
பண்டிகை காலம் காரணமாக விற்பனை அதிகரிப்பு
வாகனங்கள் விற்பனை அதிகரிக்க பண்டிகை காலங்களும் ஒரு காரணம் என்று SIAM தெரிவித்துள்ளது. இருப்பினும், உணவுப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் நிதிச் செலவினங்கள் போன்றவை காரணமாக தற்சமயம் பின்தங்கிய பகுதிகளின் தேவை தொடர்ந்து குறைவாக உள்ளது என்று அந்த அமைப்பின் இயக்குநர் ராஜேஷ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாதாரணமான கார்கள், செடான் வகை கார்கள் போன்றவற்றை காட்டிலும் பிரபலம் கொண்ட கார்கள் மற்றும் அதிக விலை கொண்ட கார்களின் விற்பனை என்பது இந்த டிசம்பர் மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முழுவதுமாகவே அதிகமாக இருந்தது என்று SIAM தெரிவிக்கிறது. அதாவது விலை குறைந்த சாதாரண மாடல் கார்களை காட்டிலும் சொகுசு கார்களை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்டுகின்றனர்.
Also Read : ஐந்தரை லட்சத்திற்கு புத்தம் புது காரா?.. அசத்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்
இரு சக்கர வாகனங்களின் விற்பனை டிசம்பர் மாதத்தில் 3 சதவீதமும், கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 7.4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருவாய் குறைவாக உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர்களின் ஆரோக்கியமான நிதிநிலைமையை சுட்டிக்காட்டுவதாக இரு சக்கர வாகன விற்பனை இருக்கிறது.
கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், புகை வெளியேற்றக் கட்டுப்பாடு விதிகளை அரசு கடுமையாக்கியுள்ளது. அந்த விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் தற்போதைய காலாண்டில் புதிய வாகன விற்பனை அபரிமிதமாக இருக்கும் என்று FADA தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Cars, Electric bike, Electric Cars, Vehicle