• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு பென்ஸ் நிறுவனத்தை பழித்தீர்த்த முன்னாள் ஊழியர் - ரூ.44 கோடி இழப்பு!

3 ஆண்டுகளுக்கு பிறகு பென்ஸ் நிறுவனத்தை பழித்தீர்த்த முன்னாள் ஊழியர் - ரூ.44 கோடி இழப்பு!

அதிருப்தி அடைந்த ஊழியர் 50 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை நொறுக்கித் தள்ளினார்.

அதிருப்தி அடைந்த ஊழியர் 50 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை நொறுக்கித் தள்ளினார்.

கடந்த டிசம்பர் 31ம் தேதி திடீரென அங்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், வெளியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு நொறுக்கித் தள்ளினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மெர்சீடஸ் பென்ஸ் கார் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியதால் அதிருப்தி அடைந்த முன்னாள் ஊழியர் ஒருவர், 44 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கார்களை ஜேசிபி எந்திரம் கொண்டு நொறுக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை ஒன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் (Basque capital Vitoria-Gasteiz) தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி திடீரென அங்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், வெளியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு நொறுக்கித் தள்ளினார்.



இதில், மிகவும் உயர் வகுப்பு கார்களான மெர்சீடஸ் பென்ஸ் வீ (Mercedes-Benz V), எலக்ட்ரிக் ஈ விட்டோஸ் (electric eVitos) வகுப்பைச் சேர்ந்த 50 கார்கள் சேதமாகியுள்ளன. இவற்றின் மதிப்பு 60 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஊழியர் சேதப்படுத்திய கார்களின் மதிப்பு 44 கோடி ரூபாயாகும். சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஜேசிபி இயந்திரத்தை எடுத்து வந்து, அவர் கார்களை நொறுக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நல்வாய்ப்பாக, மெர்சீடஸ் பென்ஸ் கார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஊழியரை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கார்களை கடுமையாக சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 38 வயதான அந்த நபரை கைது செய்த காவல்துறையினர், கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள பென்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளதாக தெரிவித்தனர். 

Also read... சேவை விதிமுறைகளை அப்டேட் செய்துள்ள WhatsApp - இதை செய்யாவிடில் உங்கள் அக்கவுண்ட் நீக்கப்படும்!

அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதால் அதிருப்தியில் இருந்த அவர், இத்தகைய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக விளக்கமளித்துள்ளனர். மேலும், அவர் கார்களை சேதப்படுத்த பயன்படுத்திய ஜேசிபி எந்திரத்தையும் திருடிக்கொண்டு வந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் ஸ்பெயினில் உள்ள பென்ஸ் நிறுவனம் இது தொடர்பாக எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

குறிப்பிட தகுந்த அளவிலான சேதங்கள் ஏற்பட்டிருப்பதால் மெர்சீடஸ் வி கிளாஸ் (Mercedes V-Class), விட்டோ இ விட்டோ (Vito, e-Vito) மற்றும் EQV கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேலையில் இருந்து நீக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் ஊழியர் ஒருவர் பென்ஸ் நிறுவன கார்களை சேதப்படுத்திய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. 



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: