• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Reliance Republic Day Digital India Sale | ஆஃபர்களை அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனம்

Reliance Republic Day Digital India Sale | ஆஃபர்களை அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் எலக்ட்ரானிக் பொருள்களை 2021-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரூபாய் 1000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்

  • Share this:
    விழா காலங்களை ஒட்டி பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை தள்ளுபடிகளையும் இலவசங்களையும் அறிவிப்பது வழக்கம். அவ்வகையில் தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனமானது குடியரசு தினத்தை முன்னிட்டு `டிஜிட்டல் இந்தியா விற்பனை’ என்ற தலைப்பின் கீழ் புதிய முன்பதிவு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் இருமடங்கு நன்மைகளுடன் சிறப்பானதாகவும் பெரியதாகவும் இருக்கும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் எலக்ட்ரானிக் பொருள்களை 2021-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ரூபாய் 1000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மேலும் கூடுதல் சலுகையாக ரூபாய் 1000 பெறலாம் என்றும் கூறியுள்ளது.

    வாடிக்கையாளர்கள் ரூபாய் 2000 செலுத்தி முன்பதிவு செய்தால் ரூபாய் 2000 இ.எம்.ஐ-யில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பதிவு சலுகைகள் உட்பட அனைத்து சலுகைகளும் டிஜிட்டல் இந்தியா விற்பனையின் கீழ் 2021-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி முதல் ஜனவரி 26-ம் தேதி வரை பெறலாம். முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மை ஜியோ கடைகள் மற்றும் www.reliancedigital.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பெற்றுக் கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: