• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • உங்கள் கார் பொல்யூஷன் டெஸ்ட்டில் தோல்வியடைந்து விட்டதா? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கார் பொல்யூஷன் டெஸ்ட்டில் தோல்வியடைந்து விட்டதா? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மாதிரி படம்

மாதிரி படம்

வாகனத்தின் பாகங்கள் கூலிங்காக இருப்பதை விட உகந்த அளவில் இயங்குவது பொல்யூஷன் டெஸ்ட் ரிசல்ட்களில் ஓரளவு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • Share this:
காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலநிலை மாற்றத்திலும் காற்று மாசு பெரும் பங்கு வகிக்கிறது. இதனிடையே இந்திய நகரங்களில் காற்று மாசின் அளவு அதிகரிக்க வாகன உமிழ்வு மிக பெரிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே காலாவதியான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (expired pollution-under-control certificate) கொண்ட வாகனங்களுக்கு அபராதம் அதிகமாக விதிக்கப்படுகிறது.

நாட்டில் குளிர்காலம் துவங்கும் போது தேசிய தலைநகரான டெல்லி உட்பட பல முக்கிய நகரங்கள் மாசு நிறைந்த நச்சு காற்றால் சூழப்பட்டு விடுகின்றன. காற்றில் மாசு அளவு பெருமளவில் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பல நகரங்களில் காணப்படும் வாகன உமிழ்வு நிலை குறிப்பிடப்படுகிறது. ஆண்டுகள் ஏற ஏற வாகன பெருக்கம் காரணமாக நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு மாசு சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தவிர எந்தவொரு மீறலும் மிகப்பெரிய அபாரதத்திற்கு வழி வகுக்கிறது.

அபாரதங்களை தவிர்க்க உங்கள் வாகனங்களை பொல்யூஷன் டெஸ்ட் சென்டருக்கு கொண்டு சென்றால் மட்டும் போதாது. உங்கள் வாகனங்களும் டெஸ்ட்டில் பாஸாக வேண்டும். சில நேரங்களில் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி ஆகியவற்றில் எதில் இயங்கும் வாகனம் என்றாலும் கூட, ஒரு வாகனம் பொல்யூஷன் கன்ட்ரோல் டெஸ்ட்டிற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். இதற்கு பழைய வாகனங்கள் டெஸ்ட்டின் போது பாஸாக போராடலாம் என்றாலும், புதிய வாகனங்கள் டெஸ்ட்டில் வெற்றி பெறும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே வெஹிகிள் பொல்யூஷன் டெஸ்ட்டில் உங்கள் வாகனம் தேர்ச்சி பெறா விட்டால் என தவறு இருக்க கூடும் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* வாகனத்தின் பாகங்கள் கூலிங்காக இருப்பதை விட உகந்த அளவில் இயங்குவது பொல்யூஷன் டெஸ்ட் ரிசல்ட்களில் ஓரளவு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கல் பெரும்பாலும் டீசல் வாகனங்களில் உள்ளது. எனவே ஒருமுறை ஃபெயிலான பின் பொல்யூஷன் டெஸ்ட்டிற்கு உங்க வாகனத்தை எடுத்து செல்லும் போது சிறிது தன் வாகனத்தை இயக்கி விட்டு பின்னர் டெஸ்டில் அதனை பங்கேற்க வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

* சீரான இடைவெளியில் உங்கள் வாகனத்தை தகுதிவாய்ந்த டெக்னீஷியனை கொண்டு சரிபார்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் வாகனத்தில் இருக்கும் தவறுகள் அல்லது செயலிழப்புகள் கூட பொல்யூஷன் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போக காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் ஏர் இன்ஜெக்ஷன் சிஸ்டமிற்கு முழு சோதனை தேவைப்படலாம். ஏனென்றால் இங்கே ஏதேனும் பழுது காணப்பட்டால் அது கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன்களின் அளவை உயர்த்த கூடும்.

Also read... ஆல்டோ முதல் பிரெஸ்ஸா வரை... மாருதி சுசுகியின் அதிரடி ஆஃபர்கள்!

* வாகனங்களில் காணப்படும் ஆக்ஸிஜன் சென்சார் வெளியேற்ற வாயுவில் (exhaust gas) ஆக்ஸிஜனின் அளவைக் கணக்கிடும் பணியை செய்கிறது. இது சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதிக உமிழ்வு நிலைக அல்லது மிக மோசமான விளைவுகளை டெஸ்ட்டின் போது காட்டலாம். எனவே சரியான டெக்னீஷியனிடம் வாகனத்தை காட்டி ஆக்ஸிஜன் சென்சார் சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொள்வது நல்லது.

* அதே போல நச்சு வாயு சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க வாகனங்களில் பயன்படுத்தப்படும் catalytic converter கருவியை டெஸ்ட்டிற்கு செல்லும் முன் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தவறு இருந்தால் கூட எதிர்மறை தாக்கம் ஏற்படும்.

* எல்லாவற்றையும் விட முக்கியமாக வாகனத்தை வழக்கமான சர்வீஸிற்கு கொடுத்து பராமரித்து வருவது எல்லா நேரங்களிலும் வாகனம் சரியாக இயங்குவதயும், பொல்யூஷன் டெஸ்ட்டில் வெற்றி பெறுவதையும் உறுதி செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: