கடந்த ஒரு மாதமாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்த தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருகின்றன. விமான ஜன்னலில் விரிசல் ஏற்படுவது, விமான ஓடுபாதையில் நாய் குறுக்கே நிற்பது, நடுவானில் இன்ஜின் செயலிழப்பு, தரை இறங்குவதில் சிக்கல், விமானத்தில் இருந்து புகை வருவது என அடுத்தடுத்து நடுங்க வைக்கும் செய்திகள் வெளிய வண்ணம் உள்ளன.
எனவே விமான போக்குவரத்தில் பயணிகள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களில் விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு இயக்குநரகம், இரண்டு சிறப்பு பிரிவை கொண்டு ஸ்பாட் சோதனைகளை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மே 2 முதல் ஜூன் 6 வரை சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. மே 2 முதல் ஜூன் 6ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 62 விமானங்கள் உட்பட 300 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஜூலை 9 முதல் 13 வரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்கி வரும் விமானங்களிலும் தொடர் ஸ்பாட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இதில் 48 விமானங்களில் 53 ஸ்பாட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அதில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க கோளாறுகள் அல்லது பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளது கண்டறியப்படவில்லை” என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளித்துள்ளது.
Also Read : ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! - 500 புதிய ரயில் சேவைகளை தொடங்குகிறது இந்திய ரயில்வே
இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தும் விதமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள தகவலின் படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 10 விமானங்களில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் செயலிழப்புகளை சரி செய்த பின்னரே அவற்றை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கி, ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் குறைந்தபட்சம் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு டிஜிசிஏ கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து ஜூலை 27ம் தேதி அன்று, கோடை காலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பாக இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட விமான சேவைகளில் 50 சதவீத விமானங்களை மட்டுமே அடுத்த 8 வாரங்களுக்கு இயக்க வேண்டும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சான்றளிக்கப்பட்ட ஆபரேட்டர்களின் மேற்பார்வை மற்றும் அவற்றின் பதிவுகளை வைத்து பார்க்கும் போது குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் சரியான நேரத்தில் சரி செய்யப்படுவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லாததால் அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ள டிஜிசிஏ, பாதுகாப்பிற்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கும் படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சிறப்பு தணிக்கைகள் மற்றும் ஸ்பாட் சோதனைகள் மூலமாக DGCA ஆல் உத்தரவிடப்பட்டுள்ளது . விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தகுந்த தணிப்பு நடவடிக்கை மற்றும் அதிக உள் கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.