ஜோத்பூரை சேர்ந்த EV ஸ்டார்ட்அப் நிறுவனமான DEVOT மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஆட்டோ எக்ஸ்போவின் கடைசி நாளான ஜனவரி 18 அன்று அறிமுகம் செய்துள்ளது.
நாட்டில் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அதிக செயல்திறன் கொண்ட 9.5 கிலோவாட் மோட்டார் பொருத்தப்பட்ட இந்த எலக்ட்ரிக் பைக்கின், தயாரிப்புக்கு தயாராக உள்ள முன்மாதிரியை நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் DEVOT மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. DEVOT மோட்டார்ஸ் நிறுவனம் யுனைட்டட் கிங்டம்-ல் அதன் R&D சென்டரையும், ராஜஸ்தானில் ஒரு டெவலப்மென்ட் சென்டரையும் நிறுவியுள்ளது.
இதனிடையே DEVOT மோட்டார்ஸின் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் டேங்க் மற்றும் பக்க கவர் பேனல்கள் பிரமிக்க வைக்கும் வண்ணப்பூச்சு விருப்பங்களுடன், க்ளீன் ரெட்ரோ டிசைனை கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அதிகபட்ச வேகம் அதாவது டாப் ஸ்பீட் மணிக்கு 120 கிமீ என்றும், இந்த எலெக்ட்ரிக் பைக்கின் ஸ்பீட் பிக்கப் மிக விரைவாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. மேலும் தங்களது இந்த புதிய எலெக்ட்ரிக் பைக்கானது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 200 கிமீ தூரம் வரை செல்லும். பவர் பற்றி பேசுகையில், DEVOT மோட்டார் சைக்கிளில் 9.5 kW உயர் செயல்திறன் கொண்ட பேட்டரி பேக் உள்ளது.
தவிர 3 மணி நேரத்தில் இந்த பைக்கை முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் DEVOT மோட்டார்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. நிறுவனம் இந்த பைக்கை நடப்பாண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் TFT ஸ்க்ரீன், ஆன்டிதெஃப்ட் மற்றும் டைப் 2 சார்ஜிங் பாயிண்ட்ஸ்களுடன் கீலெஸ் சிஸ்டம் (keyless system) உள்ளது. DEVOT மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் 70-90 சதவீத உள்ளூர் மயமாக்கலுக்கு அதாவது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கை நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்த பைக்கின் விலை குறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி வெடிப்பு எலெக்ட்ரிக் பைக்கில் மிகப்பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில், பேட்டரி பேக்கை பாதுகாப்பாக வைத்திருக்க DEVOT மோட்டார்ஸ் நிறுவனம் லித்தியம் LFP பேட்டரி கெமிஸ்ட்ரியை பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த பைக்கின் பேட்டரி தெர்மல் மேனேஜ்மென்ட் இஷ்யூஸ்களுக்கு குறைவாகவே பாதிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
Also Read : மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் பயன்தராது : கேடிஎம் தலைவர் அதிர்ச்சி தகவல்
DEVOT மோட்டார்ஸின் நிறுவனர் மற்றும் CEO வருண் தியோ பன்வார் பேசுகையில், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஸ்ட்ரைக்கிங் கான்ஃபிகரேஷன் ஆகியவற்றுடன் DEVOT மோட்டார் சைக்கிள் எலெக்ட்ரிக் பைக் செக்மென்டை நவீனப்படுத்தும் திறனை கொண்டுள்ளது என உறுதியாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோவை காட்சிப்படுத்தவும், EV பெனட்ரேஷன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு பிளாட்ஃபார்மை எங்களுக்கு வழங்கிய ஆட்டோ எக்ஸ்போ நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bike, Electric bike