மஹிந்திரா 2021 எக்ஸ்யூவி 500 இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மஹிந்திரா 2021  எக்ஸ்யூவி 500 இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவி வாகனம் நடப்பாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். வாகன சந்தை நிலவரம் அறிந்த சில நிபுணர்கள் புதிய 2021 XUV500 அநேகமாக மே அல்லது ஜூன் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர்.

  • Share this:
இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் 7 சீட்டரான மஹிந்திரா எக்ஸ்யூவி (XUV500 2021) தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது மாற்றங்களுடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோ டிவிஷனின் தலைமை நிர்வாக அதிகாரியான வீஜய் நக்ரா சமீபத்தில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 வாகனத்தின் இந்திய வெளியீட்டு விவரங்களை சமீபத்தில் அளித்த பேட்டியின் போது உறுதிப்படுத்தினார். அப்போது பேசிய அவர் புதிய எக்ஸ்யூவி 500 எஸ்யூவி வாகனம் நடப்பாண்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் காலாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். வாகன சந்தை நிலவரம் அறிந்த சில நிபுணர்கள் புதிய 2021 XUV500 அநேகமாக மே அல்லது ஜூன் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர்.

திருத்தப்பட்ட க்ரில், புதிய டோர் ஹேண்டில்கள் போன்ற பாகங்களுடன் மேம்பட்ட தோற்றத்தை கொண்டிருக்கும்.XUV500 2021 காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை கேபின் முன்பை விட பெரியதாக மட்டுமல்லாமல், அதிக பிரீமியமாகவும் இருக்கும். இது டிரைவருக்கான மெமரி இருக்கைகளுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. வாகனத்தின் உட்புற தோற்றத்தை மஹிந்திரா நிறுவனம் டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம் மற்றும் சென்டர் கன்சோலுக்கான பளபளப்பான பூச்சுடன் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாகன அம்சங்களின் பட்டியலில் ஒரு பெரிய டூயல் ஸ்கிரீன் அமைத்தல், ரோட்டரி டிரைவ் மோட் செலெக்டார், ஃபிரன்ட் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், மூன்றாவது வரிசையில் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் கப் ஹோல்டர்கள் உள்ளிட்ட இன்னும் பலவற்றை எதிர்பார்க்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், கேமராவுடன் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் ஆகியவற்றை கொண்டிருக்கும் எனவும் தெரிகிறது. தவிர இது டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் -1 அட்டானமஸ் டிரைவிங் தொழில்நுட்பத்துடன் வரும் என கூறப்படுகிறது. இறுதியாக XUV500 2021 காரின் எஞ்சின் என்று வரும் போது, புதிய மஹிந்திரா XUV500 2021 SUV-யானது இரண்டு புதிய எஞ்சின் விருப்பங்களுக்கிடையில் தேர்வுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் எம்ஸ்டாலியன் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளிட்டவையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் இரு என்ஜின் தேர்வுகளுக்கான டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவையும் அடங்கும் என தெரிகிறது. இந்த காரின் விலைகள் ரூ.14 லட்சத்திலிருந்து (எக்ஸ்ஷோரூம்) தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Published by:Ram Sankar
First published: