முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / அடேங்கப்பா இவ்ளோ மைலேஜ் கொடுக்குதா? - மாருதி செலிரியோ சிறப்பம்சங்கள்!

அடேங்கப்பா இவ்ளோ மைலேஜ் கொடுக்குதா? - மாருதி செலிரியோ சிறப்பம்சங்கள்!

 மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

என்னதான் மற்ற அம்சங்கள் இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை மைலேஜ் என்பது கார் வாங்குவதில் முக்கியமான டிசைடிங் ஃபேக்டராக உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னதான் மற்ற அம்சங்கள் இருந்தாலும் இந்திய வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை மைலேஜ் என்பது கார் வாங்குவதில் முக்கியமான டிசைடிங் ஃபேக்டராக உள்ளது. அந்த வகையில் செலிரியோ பெரும்பாலானவர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் என்று பார்த்தால் பட்ஜெட் விலை கார்கள் தான். இந்த ரக கார்களை ஸ்டைல், லுக், டெக்னிகல் அப்டேசன், இவையெல்லாவற்றையும் தாண்டி முக்கிய பங்கு வகிப்பது மைலேஜ் மற்றும் விலை. அப்படி மைலேஜ் மற்றும் விலை இரண்டிலுமே நடுத்தர மக்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் காராக இருக்கிறது மாருதி சுசுகியின் தயாரிப்பான செலிரியோ. அதனால்தான் செலிரியோ பெஸ்ட் மைலேஜ் காராக அறியப்படுகிறது.

செலிரியோ பெட்ரோல் மற்றம் சிஎன்ஜி என இரு வகை எஞ்சின்களில் வெளிவருகிறது. நான்கு மாடல்களில் வெளியாகும் இந்த கார்களின் விலை ரூ.5.35 லட்சம் முதல் ரூ.7.13 லட்சம் வரை தான். அதிலும் 1லட்சம் ரூபாய் என மிகக் குறைந்த முன்பணம், குறைந்த பட்சம் மாதம் 8 ஆயிரம் ரூபாய் என மிகக் குறைந்த தவணை என நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில இருக்கிறது.

செலிரியோவின் விலை அம்சம். இந்தக் காரின் எஞ்சின் மற்றம் மைலேஜ் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம். செலிரியோவின் மைலேஜ் லிட்டருக்கு 24.97 கிமீ முதல் 35.6 கிமீ வரை இருக்கும். இந்த காரின் தானியங்கி பெட்ரோல் மாறுபாடு லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜ் தரும். மேனுவல் பெட்ரோல் வேரியன்ட் லிட்டருக்கு 25.24 கிமீ மைலேஜ் தரும். மேனுவல் சிஎன்ஜி வகை மைலேஜ் 35.6 கிமீ. அதன்படி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் அதிக எரிபொருள் திறன் கொண்ட ஹேட்ச்பேக் கார் இதுவாகும். மிகச் சிறந்த மைலேஜ் தரும் காராக செலிரியோ அறியப்படுகிறது.

இந்த அளவிற்கு நல்ல மைலேஜ் கிடைப்பதற்கு இந்த எஞ்சினில் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்சின் தான் காரணம். செலிரியோவில் 1 லி.கே சீரீஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 67 PS திறன் மற்றும் 89 Nm டார்க்-ஐ வெளிப்படுத்தக் கூடியது. 5 கியர்கள் கொண்டது இந்த எஞ்சின். சிஎன்ஜி எஞ்சினைப் பொருத்தவரை பெட்ரோல் எஞ்சினை விட கொஞ்சம் குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

செலிரியோவில் 7இஞ்ச் டச் ஸ்கிரீன், பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ளது. பாதுகாப்பிற்காக முன்புறம் இரண்டு ஏர் பேக்குகள் இந்தக் காரில் உள்ளன . ஹில் ஹோல்ட் உதவி, ABS மற்றும் EBD பார்க்கிங் சென்சார் என நவீன வசதிகளும் கொண்டது செலிரியோ. மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான டாடா டியாகோ மற்றும் சிட்ரியோன் சி3 உள்ளிட்ட சிறிய ரக கார்களில் இருக்கும் வசதிகளை இந்த செலிரியோவும் நிறைவு செய்கிறது. மேலும், செலிரியோ மக்கள் விரும்பும் ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும், பர்சை பதம் பார்க்காத விலையில் கிடைப்பதால் நடுத்தர மக்கள் கார் வாங்க விரும்பினால் மாருதி செலேரியோவை தேர்வு செய்யலாம்.

First published:

Tags: Car, Maruti Suzuki