Home /News /automobile /

நிலக்கரி விநியோக தேவை 17 சதவீதம் உயர்வு - மத்திய அரசு

நிலக்கரி விநியோக தேவை 17 சதவீதம் உயர்வு - மத்திய அரசு

மொத்த விநியோகம்  58.45 மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது

மொத்த விநியோகம் 58.45 மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது

ஓராண்டுக்கு முந்தைய கால கட்டத்தை ஒப்பிடுகையில், தற்போதைய ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி என்பது 11.37 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நாடெங்கிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலக்கரி அளவு கடந்த ஜூலை மாதத்தில் 17.09 சதவீதம் அதிகரித்து, மொத்த விநியோகம் என்பது 58.45 மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பை போதுமான அளவில் வைத்துக் கொள்ளக் கடந்த சில மாதங்களில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மொத்த நிலக்கரியின் அளவு 49.92 மில்லியன் டன்கள் ஆகும். முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி தேவை என்பது 8.51 சதவீதம் கூடுதலாகி 67.81 மெட்ரிக் டன்களாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read:Independence Day Discount.. ரூ.60 ஆயிரம் வரை அதிரடி ஆபர்களை அறிவித்த ரெனால்ட்.!

    ஓராண்டுக்கு முந்தைய கால கட்டத்தை ஒப்பிடுகையில், தற்போதைய ஜூலை மாதத்தில் நிலக்கரி உற்பத்தி என்பது 11.37 சதவீதம் அதிகரித்து 54.25 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை போதுமான அளவில் இருப்பு வைக்கும் அளவில், நிலக்கரியை அவசரத் தேவையாகக் கருதி இறக்குமதி செய்ய வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இந்தியாவின் 80 சதவீத நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதே சமயம், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து 7.91 லட்சம் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யக் கோல் இந்தியா நிறுவனம் அனுமதி அளித்தது.

    கடந்த ஜூன் 9ஆம் தேதி, 2.416 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. CESC, அதுனிக் பவர், ரத்தன் இந்தியா, சாய் வர்தா, அவந்தா பவர் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிகளை வாங்க விருப்பம் தெரிவித்தனர். இது மட்டுமன்றி மழைக்காலங்களில் ஏற்படும் பற்றாக்குறையை மேற்கொள்ளக் கூடுதலாக மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஜூன் 10ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டன.

    நாட்டில் ஏப்ரல் மற்றும் மே போன்ற கோடைக் காலங்களில் மின் நுகர்வு அதிகரிக்கும்போது, அதனை எதிர்கொள்வதற்காக அனல் மின் நிலையங்களில் தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அண்மையில் நாடெங்கிலும் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதை மீண்டும் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    Published by:Janvi
    First published:

    Tags: Coal, Coal importing, Hiked price

    அடுத்த செய்தி