• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • எக்ஸ்பிரஸ் வேகத்தில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலை திட்டம்... முன்கூட்டியே நிறைவடையும் பணிகள்!

எக்ஸ்பிரஸ் வேகத்தில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலை திட்டம்... முன்கூட்டியே நிறைவடையும் பணிகள்!

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலைப் பணிகளை, மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்கரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

  • Share this:
டெல்லி - மும்பை இடையிலான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடைபெற்று வருவதால், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணிகள் நிறைவடையும் கூறப்படுகிறது.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் டெல்லி - மும்பை இடையிலான 1200 கிலோ மீட்டர் சிக்னல் இல்லாத அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தது. பாரத்மாலா பரியோஜ்னா கட்டம் -1 திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி, இந்த சாலைப் பணிகள் துவங்கப்பட்டன. முதலில் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிக்க பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏறத்தாழ அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலை, தேவைப்பட்டால் எதிர்காலத்தில் 12 வழி சாலையாகவும் மாற்றிக்கொள்ள முடியும். தற்போது மும்பை - டெல்லி இடையே பயணிக்க ஏறத்தாழ 20 முதல் 22 மணி நேரம் செலவாகும் நிலையில், இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தபிறகு 8 மணி நேரத்துக்கு முன்னதாகவே மும்பை மற்றும் டெல்லியை அடைய முடியும் என கூறப்படுகிறது. இந்த சாலை மூலம் டெல்லி - மும்பை இடையே பயணத் தொலைவு 220 கிலோ மீட்டர் குறைவதுடன், அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த நெடுஞ்சாலைப் பணிகளை, மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்கரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஹரியானாவில் சோக்னா பகுதியில் அவர் ஆய்வு செய்தபோது அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பேசிய அவர், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் தலைநகரை இணைக்கும் மிக முக்கியமான திட்டம் எனத் தெரிவித்தார்.

Also read... புதிய தினசரி விமானங்களை விரைவில் ரூட் நெட்ஒர்க்கில் சேர்க்கும் இண்டிகோ நிறுவனம்!

இதனால், உன்னிப்பாக இந்தப் பணிகளை கவனித்து வருவதாக கூறிய நிதின் கட்கரி, இதற்காக மத்திய அரசு சுமார் ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியிருப்பதாக கூறினார். டெல்லி - மும்பை அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களும் இணைக்கப்படுவதாக எனத் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் விவசாய ஏற்றுமதி, இறக்குமதியில் இந்த சாலையில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுக்கும் என கூறிய நிதின் கட்கரி, நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஏறத்தாழ அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே, கே.எம்.பி, கே.ஜி.பி மற்றும் டெல்லியைச் சுற்றி ரிங்ரோடுகள் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக கூறிய அவர், எஞ்சிய பணிகள் அதே வேகத்தில் நடைபெறும் எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: