டெல்லியில் இ-ஆட்டோகளுக்கு விரைவில் பதிவு - ரூ.29,000 வரை மானியம்!

இ-எலக்டிரிக் ஆட்டோ

டெல்லியில் ஏற்படும் காற்று மாசுவில் மூன்றில் இரண்டு பங்கு காற்று மாசு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் தினந்தோறும் சுமாா் 12-16 மணி நேரம் சாலையில் ஓடுகின்றன. இவற்றுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுவை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என கைலாஷ் கெலாட் நம்பிக்கை தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லியில் விரைவில் மூன்று சக்கர இ-ஆட்டோகளுக்கான பதிவு தொடங்கப்படும் என அறிவித்துள்ள அம்மாநில அரசு ரூ.29,000 வரை மானியம் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

டெல்லியில் காற்றுமாசு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்றின் தரம் மோசமான அளவை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி காற்று மாசுக்கு வாகன புகை, அண்டை மாநிலங்களில் விளை நிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளில் இருந்து வரும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன. இதனால், இவற்றை குறைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, மாநில அரசு எலக்டிரிக் வாகன பயன்பாட்டை பெருமளவில் ஊக்குவித்து வருகிறது. 

அந்தவகையில் டெல்லியில் விரைவில் இ-ஆட்டோக்களுக்கான பதிவு தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இ- ஆட்டோக்களை பதிவு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 29,000 வரை மானியம் மற்றும் பல சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ( Kailash Gahlot), டெல்லி அரசின் ஸ்விட்ச் டெல்லி (Switch Delhi) திட்டத்தின் கீழ் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோக்களுக்கான பதிவு விரைவில் தொடக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.  

இதன்படி, 177 வகையான மூன்று சக்கர வாகனங்களை இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறிய அவர், மின்சார ரிக்ஷாக்களுக்கு கடந்த ஆண்டு முதல் ரூ.30 ஆயிரம் வரை டெல்லி அரசு மானியம் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார். அதேபோல், மின்சார வாகனத் திட்டத்தின் கீழ் இ - ஆட்டோக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாகவும்,  இ-ஆட்டோக்களுக்கு ரூ.29 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் எனக் கூறினார்.  மின்சார வாகனங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்தினால், வாகன புகையால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு முழுமையாக இருக்காது எனவும் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்

Also read... 'ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்' உற்பத்திக்காக ஓசூரில் அமைக்கப்பட்டு வரும் மெகா ரோபாட்டிக்ஸ் தொழிற்சாலை!

டெல்லியில் ஏற்படும் காற்று மாசுவில் மூன்றில் இரண்டு பங்கு காற்று மாசு இரண்டு, மூன்று சக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் தினந்தோறும் சுமாா் 12-16 மணி நேரம் சாலையில் ஓடுகின்றன. இவற்றுக்குப் பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தினால் காற்று மாசுவை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என கைலாஷ் கெலாட் நம்பிக்கை தெரிவித்தார். எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி அரசு, ஸ்விட்ச் டெல்லி என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 8 வாரங்கள் நடைபெறும் பிரம்மாண்ட பிரச்சாரத்தில் எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், டெல்லி அரசு எலக்டிரிக் வாகனங்களுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாநில அரசு கூறியுள்ளது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: