டெல்லியின் ‘எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை’ திட்டத்துக்குக் குவியும் பாராட்டுகள்!

2023-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பதியப்படும் வாகனங்களுள் 25 சதவிகிதம் இ-வாகனங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் ‘எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை’ திட்டத்துக்குக் குவியும் பாராட்டுகள்!
2023-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பதியப்படும் வாகனங்களுள் 25 சதவிகிதம் இ-வாகனங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • News18
  • Last Updated: December 22, 2018, 12:27 PM IST
  • Share this:
டெல்லி அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ‘எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை’ திட்டத்துக்குப் பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

டெல்லியின் ‘எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை’ திட்டம் மூலம் டெல்லியில் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பதியப்படும் வாகனங்களுள் 25 சதவிகிதம் இ-வாகனங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் கொள்கை திட்டத்தில் இந்திய அரசின் ஆலோசகராகப் பணியாற்றிய ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகக் கொண்டு வரப்பட்ட மிகச் சிறந்த கொள்கையாகக் கருதுகிறேன். இத்தகைய கொள்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய டெல்லி அரசுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


புது முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட வேண்டும். சிறந்த ஆராய்ச்சிகள் எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் வாகனங்களுக்கான விற்பனை நிலையில் சமநிலையைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.

டெல்லி அரசின் புது முயற்சி குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் காற்று மாசுபாடைக் குறைக்க அனைத்து விதமான முயற்சிகளையும் டெல்லி அரசு எடுத்து வருகிறது. அதேபோல், போக்குவரத்துத் தளத்தில் இதற்குத் தேவையான அனைத்து மாறுதல்களையும் கொண்டு வரும் நோக்கிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

வாகன தொழிற்சாலைகளிலும் இனி வரும் காலங்களில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இ-வாகனங்களுக்காக மானியம் தரச்செய்வது மட்டும் நிரந்திர தீர்வாகாது. அதனால், பலரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தல் வேண்டும்” என்றார்.மேலும் பார்க்க: கொலையில் முடிந்த பேஸ்புக் காதல்..!
First published: December 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்