Home /News /automobile /

எலட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து ஆனந்த் மஹிந்திராவுக்கு ஐடியா கொடுத்த ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு!

எலட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து ஆனந்த் மஹிந்திராவுக்கு ஐடியா கொடுத்த ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு!

ஜோஹோ நிறுவனத்தில் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மஹிந்திரா டிரியோ எலட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து சில மேம்பாடுகளை பரிந்துரைத்துள்ளார்.

ஜோஹோ நிறுவனத்தில் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மஹிந்திரா டிரியோ எலட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து சில மேம்பாடுகளை பரிந்துரைத்துள்ளார்.

ஜோஹோ நிறுவனத்தில் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மஹிந்திரா டிரியோ எலட்ரிக் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து சில மேம்பாடுகளை பரிந்துரைத்துள்ளார்.

    உலகளவில் எலட்ரிக் வாகனங்கள் கவனம் பெற்று வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் டிரியோ எலட்ரிக் ஆட்டோவை வாங்கிய ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதனை தனது கிராமப்பகுதியில் தானே ஓட்டிப்பார்த்து, சில ஐடியாக்களையும் ஆனந்த் மஹிந்திராவுக்கு அவர் வழங்கியுள்ளார்.

    இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு அவரது ட்விட்டர் பதிவில் ஆட்டோ ஓட்டும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளதாவது, நேற்றைய தினம் மஹிந்திரா நிறுவனத்தின் எலட்ரிக் ஆட்டோவான மஹிந்திரா டிரியோவை வாங்கினேன். ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் 125 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. அதனால், இது ஒரு நடைமுறை பயண வாகனமாக விளங்குகிறது. இதனால், இந்த ஆட்டோவில் சென்று வருவதை நான் அதிகம் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



    மேலும், மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திராவை குறிப்பிட்டு, இந்த ஆட்டோ குறித்து தனக்கு சில ஆலோசனைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் விலையானது ரூ.3.5 லட்சம் ஆகும். மிகவும் மலிவு விலை குடும்ப வாகனமாக உள்ளது. இன்னும் இதன் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்க இதன் விலை குறையலாம்.

    இதன் வடிவமைப்பு மிகவும் அருமையான வாகனமாக தோற்றமளிக்கிறது. நான் எனது ஆட்டோவை கிராமப்புற சாலைகளில் ஓட்டிச்செல்லும்போது, ஊர் மக்கள் என்னிடம் இந்த ஆட்டோ எங்கே கிடைக்கும் என்று கேட்கின்றனர். அதனால், இந்த எலட்ரிக் ஆட்டோவில், பலவிதமான மாறுபட்ட வடிவமைப்புகளையும், வண்ணங்களையும் வழங்குங்கள். கும்பம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது போன்ற வகையில் வழங்குங்கள்,

    இந்த குறைந்த விலை மின்சார வாகனத்தை பிரபலப்படுத்த ஒரு சிறந்த சந்தைப்படுத்துதல் பிரச்சாத்துடன் இதனை எடுத்து வாருங்கள். சிறந்த ஒன்றாக இருக்கும். நான் இந்த ஆட்டோவை ஓட்டுவதை பெரிதும் வரும்புகிறேன். எலட்ரிக் ஆட்டோ என்பதால் கிளட்ச், கியர் இல்லாமல் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீதர் வேம்புவின் இந்த ஆலோசனைக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன. எனினும், ஸ்ரீதர் வேம்புவின் பரிந்துரைகளுக்கு ஆனந்த் மஹிந்திரா தற்போது வரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    Also read: டிஜிட்டல் சமூகத்தை இந்தியா ஆளும்; மிகப்பெரிய மாற்றத்தின் தொடக்கம் தான் இது - முகேஷ் அம்பானி
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anand Mahindra, Mahindra

    அடுத்த செய்தி