HOME»NEWS»AUTOMOBILE»datsun india offering discounts of upto rs 45000 on redi go go and go till november 30 vin ghta
டட்சன் கார்களுக்கு அதிரடி ஆபர்கள் - ரூ. 45,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி , சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல வணிக நிறுவங்கள் மூடப்பட்டதால் ஏராளமானோர் வேலை இழந்தனர். தற்போது சற்று இயல்பு நிலை திரும்பினாலும் மக்கள் தங்களது பொருளாதாரத்தை சீராக்க கடுமையாக போராடவேண்டியுள்ளது. இதுபோன்ற காலங்களில், பெரும்பாலான மக்கள் பணத்தை சேமிக்க சேமிக்க முயற்சி செய்வது இயல்பானது. இதன் விளைவாக பயண தொழில், ஹோட்டல் தொழில் மற்றும் ஆட்டோமொபைல் தொழில் ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தள்ளுபடி , சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டட்சன் அட்டகாசமான தள்ளுபடி திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வாக டட்சன் கார்கள் உள்ளன. பட்ஜெட் விலையில் போதிய இடவசதி கொண்ட டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிகபட்சமாக ரூ.45,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தள்ளுபடி திட்டத்தை நவம்பர் 30 வரை பெறலாம்.
டட்சன் நிறுவனம் பணம் தள்ளுபடி, இயர் எண்ட் தள்ளுபடி, கார் பரிமாற்ற போனஸ் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கான சிறப்பு தள்ளுபடி என பல்வேறு வகையான தள்ளுபடியை வழங்குகிறது, ஒவ்வொரு மாடலுக்கும் என்னென்ன சலுகைகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
டட்சன் ரெடிகோ (Datsun Redi-GO)
டட்சன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.34,500 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.7,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். மேலும் ஆண்டு இறுதி சலுகையாக ரூ. 11,000ஐ பெறலாம். மருத்துவத் தொழிலில் ஈடுபடுபவர்கள் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் கார்ப்பரேட் தள்ளுபடியை பெற தகுதியுடையவர்கள் என அறிவித்துள்ளனர்.
டட்சன் கோ காருக்கு ரூ.47,500 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 வரையில் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். ஆண்டு இறுதி சலுகையாக ரூ.11,000 வரை சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படும். இந்த மாடல் கார்களுக்கு மருத்துவ துறை ஊழியர்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகை வழங்கப்படாது என நிறுவனம் அறிவித்துள்ளது.
டட்சன் கோ+ (Datsun GO+)
டட்சன் கோ+ காருக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம். ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். ஆண்டு இறுதி சலுகையாக ரூ.11,000 வரை சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படும். GO மற்றும் GO + மாறுபாட்டிற்கான மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், அவர்கள் இருவரும் மருத்துவ துறை ஊழியர்களுக்கு எந்தவொரு நிறுவன தள்ளுபடியையும் வழங்கவில்லை.