• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Datsun வழங்கும் நவம்பர் மாத தள்ளுபடி... redi-GO, GO மற்றும் GO+ மாடல்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவிப்பு!

Datsun வழங்கும் நவம்பர் மாத தள்ளுபடி... redi-GO, GO மற்றும் GO+ மாடல்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவிப்பு!

டட்ஸன்

டட்ஸன்

Datsun GO அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கு ரூ.20,000 வரை ரொக்கப் பலனையும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது.

  • Share this:
நவம்பர் மாத பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் Datsun India நிறுவனம் தனது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.40,000 வரை சலுகைகளை வழங்குகிறது. முக்கியமாக இந்த சலுகைகள் Redi-GO, GO மற்றும் GO+ ஆகிய மாடல்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகைகள் நவம்பர் 30 வரை அல்லது ஸ்டாக் நீடிக்கும் வரை செல்லுபடியாகும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் அறிவித்துள்ள ரூ.40,000 சலுகைகள், ரொக்க தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ் என பல வடிவத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இருப்பினும், இந்த நன்மைகள் வாகனத்தின் வேரியண்ட் மற்றும் விற்பனை செய்யப்படும் இருப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து பின்வருமாறு காணலாம்.

டட்சன் ரெடி-கோ கார் (Datsun Redi-GO car):

Datsun Redi-GO கார் மொத்தம் ரூ.40,000 வரையிலான நன்மைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.20,000 ரொக்க தள்ளுபடியையும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். NIC-இயக்கப்பட்ட டீலர்ஷிப்களில் மட்டுமே வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தின் பரிமாற்ற போனஸ்களை பெற முடியும் என்று Datsun India நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவன ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் வரை கூடுதல் கார்ப்பரேட் நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. Datsun Redi-Go காரின் விலை வேரியாண்டிற்கு ஏற்ப ரூ.3.98 லட்சம் முதல் ரூ.4.96 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது.

டட்சன் கோ (Datsun GO):

Datsun GO அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கு ரூ.20,000 வரை ரொக்கப் பலனையும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் நிறுவனம் வழங்குகிறது. GO ஹேட்ச்பேக்கின் ஆரம்ப விலைகள் ரூ.4.02 லட்சத்தில் தொடங்கி ரூ.6.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை விற்பனை செய்யப்படுகிறது.

Also read... மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது "Yezdi" ரோட்கிங் பைக்குகள்!

டட்சன் கோ+(Datsun GO+):

டட்சன் இந்தியா நிறுவனம் அதன் Datsun GO+ வாகனத்திற்கான பலன்களை வழங்குகிறது. ஏழு இருக்கைகள் கொண்ட இந்த வாகனம் அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலான நன்மைகளுடன் விற்பனைக்கு வருகிறது. நிறுவனம் ரூ.20,000 ரொக்க நன்மைகளையும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. Carandbike அறிக்கையின்படி, இந்த காரின் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது.

டட்ஸன் நிறுவனத்தை போலவே ஹோண்டா, ஹூண்டாய் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: