Home /News /automobile /

ஜிடி 120 - சைபோர்க் நிறுவனத்தின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

ஜிடி 120 - சைபோர்க் நிறுவனத்தின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம் - என்ன ஸ்பெஷல்?

ஜிடி 120 -எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்

ஜிடி 120 -எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்

electric bike GT 120 : சைபோர்க் ஜிடி 120 எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான இக்னிட்ரான் மோட்டோகார்ப், சைபோர்க் பிராண்டில் GT 120 என்ற தனது மூன்றாவது அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் மூலம், எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில், தற்போது ஸ்போர்ட்ஸ் பைக்கும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சைபோர்க் ஜிடி 120 எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த ஸ்போர்ட்ஸ் EV கருப்பு மற்றும் அடர் ஊதா என்ற இரண்டு வண்ணங்களில் 4.68 kWH லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது. இந்த பைக்கில் ஜியோ லொக்கேட்/ஜியோ ஃபென்சிங், பேட்டரி ஸ்டேட்டஸ், USB சார்ஜிங், ப்ளூடூத், கீ-லெஸ் இக்னிஷன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் உள்ளது. இது 180km வரம்பில் மணிக்கு 125km வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

15 ஆம்ப் ஹோம் சார்ஜருடன் பேட்டரி வாட்டர் புரூஃப் மற்றும் டச்-ஸேஃப் அம்சங்களுடன் வருகிறது. ஒரு முறை 100 % சார்ஜ் செய்தால், 4 – 5 மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம். பைக்கின் அக்சிலரேஷன் 2.5 நொடிகளில் மணிக்கு 0-40 km ஆகும்.

சைபோர்க் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் உள்ளது. மேலும், இதில் ரிவர்ஸ் மோட் மற்றும் பல்வேறு ஒலிகளுடன் பார்க்கிங் உதவியும் பொருத்தப்பட்டுள்ளது. பிரத்யேக ரைடிங் அனுபவத்தை வழங்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப்-ஃப்ரண்ட் மற்றும் பின்பகுதியில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் அப்சார்பருடன் வருகிறது. ஜிடி 120 வாகனத்தின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே சைபோர்க் நிறுவனத்தால் அறிமுகம் செய்யபப்ட்ட யோடாவைப் போலவே இருக்கிறது.

இதையும் படியுங்கள் : புதிய வாகனங்களுக்கான பாரத் சீரிஸ் பதிவு அடையாளம் அறிமுகம் - யார் பயன் பெறலாம்?

சைபோர்க் நிறுவனம், கடந்த மாதம் இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தையில் நுழைந்தது. இதில் இந்தியாவின் முதல் ‘மேட் இன் இந்தியா’ எலக்ட்ரிக் க்ரூசரான யோடாவை நிறுவனம் அறிமுகப் செய்தது. யோடவில் 3.24 kWH லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது, இந்த க்ரூசர்150 கிமீ வரம்பில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும். யோடா கருப்பு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது.



மற்ற அம்சங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட சைபோர்க்கின் இந்த இரண்டு எலெக்ட்ரிக் று சக்கர வாகனங்களும், மாற்றக்கூடிய பேட்டரியுடன் வருகின்றன. ஜியோ லொக்கேட்/ஜியோ ஃபென்சிங், USB சார்ஜிங், கீ லெஸ் இக்னிஷன் (ரிமோட் கண்ட்ரோல்), ப்ளூடூத், மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் இந்த இரண்டு மாடல்களிலும் உள்ளன.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு 1 கிலோமீட்டருக்கும், கட்டணம் செலுத்தி சேவைப் பெறும் மற்றும் பேட்டரியை மாற்றும் சைபோர்க் {Joule} நிலையங்கள் அமைக்கபப்ட்டு SOS (சாலை உதவி) உடன் கூட்டு சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி