• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கொரோனா இரண்டாம் அலை நெருக்கடியிலும் பாதிப்புகள் இன்றி செயல்படும் மாருதி சுசுகியின் உற்பத்தி மற்றும் விற்பனை!

கொரோனா இரண்டாம் அலை நெருக்கடியிலும் பாதிப்புகள் இன்றி செயல்படும் மாருதி சுசுகியின் உற்பத்தி மற்றும் விற்பனை!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு தாக்கத்தால் பின்வாங்கத் தொடங்கிய தொழில் மற்றும் அடுத்தடுத்த விற்பனை சரிவு ஆகியவை பல ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களை முற்றிலும் பாதித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டி வரும் சூழலில் பல மாநில அரசாங்கங்கள் தொற்று பரவுவதை தடுக்க பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த கட்டுப்பாடுகள் நாட்டின் பெரும்பாலான வணிகங்களை பாதிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல ஆட்டோமொபைல் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கு தாக்கத்தால் பின்வாங்கத் தொடங்கிய தொழில் மற்றும் அடுத்தடுத்த விற்பனை சரிவு ஆகியவை பல ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களை முற்றிலும் பாதித்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்திய பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் சற்று ஏற்றத்தை கண்டன.

இப்போது மீண்டும் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. கொரோனாவின் பரவலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக நாட்டில் பல வாகன உற்பத்தியாளர்கள் ஒரு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளனர். மறுபுறம், சில வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் இந்த சூழ்நிலையை சிறப்பாக சமாளித்து வருகிறது.

இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில், எங்கள் நிறுவனம் முழுத் திறனில் உற்பத்தியை இயக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் பர்கவா, நிறுவனத்தின் நிதி முடிவுகள் அறிவித்த பின்னர் ஊடகங்களுடன் பேசியபோது, நிறுவனம் 100 சதவீத உற்பத்தியை பராமரிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்த நேரத்தில் தொழிலாளர் பற்றாக்குறை இல்லை என்றும், வாகனங்களுக்கான வலுவான தேவையை நிறுவனம் பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Also read... மயூர் ஷெல்கேவுக்கு புல்லட் பரிசு - ஜாவா நிறுவனம் அசத்தல்!

ஆர்.சி.பர்கவாவின் கூற்றுப்படி, மாருதி சுசுகி உற்பத்தி செய்யும் எந்த சரக்குகளையும் விற்க முடிகிறது. பெரும்பாலும் உலகளாவிய ஷிப் பற்றாக்குறையால் டெலிவரி செய்வதால் மட்டும் நீண்ட பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நிறுவனம் விற்பனையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் சந்தித்துள்ளதா என்று செய்தியாளர்களிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்ட போது, கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பயணத்தை நோக்கித் தள்ளும் என்றும், இது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நுழைவு நிலை வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்றும் ஆர்.வி.பர்கவா நம்புவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால், பல வாகன உற்பத்தியாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான பணியாளர்களுடன் உற்பத்தியை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக, டாடா மோட்டார்ஸ் வரையறுக்கப்பட்ட நபர்களின் ஷிப்ட்களில் வேலை செய்யத் தொடங்கியது. இருப்பினும், எம்ஜி மோட்டார்ஸ் போன்ற சில பிராண்டுகள் சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளன.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.29 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.8 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம் இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலக அளவில் மொத்த பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பலி எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: