வாகன ஓட்டிகள் அபராதங்களைக் குறைக்க என்ன செய்யலாம்?- வைரலாகும் போலீஸ் வீடியோ!

ஆவணங்கள் கையில் இல்லாமல் வீட்டில் இருந்தால் நீங்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொள்ளலாம்.

வாகன ஓட்டிகள் அபராதங்களைக் குறைக்க என்ன செய்யலாம்?- வைரலாகும் போலீஸ் வீடியோ!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 21, 2019, 1:55 PM IST
  • Share this:
போக்குவரத்து அபராதங்கள் அதிக்கப்படியாக விதிக்கப்பட்டால் அதிலிருந்து வாகன ஓட்டிகள் தப்பிப்பது எப்படி? என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட போலீஸ் அதிகாரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல் ஆன பின்னர் கடுமையான விதிமுறைகள் உடன் அதிகப்படியான அபராத விதிப்பும் பின்பற்றப்பட்டு வருகிறது. 500 ரூபாய் அபராதம் எல்லாம் 5 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கில் அபராதம் கட்டும் சூழலும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 100 ரூபாய் மட்டும் செலுத்தி நியாயமான வாகன ஓட்டிகளால் தப்பிக்க முடியும் என இந்தியில் விளக்கி உள்ளார் அந்த காவல்துறை அதிகாரி.


சுனில் சந்து என்னும் அந்த போலீஸ் அதிகாரி தன் வீடியோவில், “போதிய ஆவணங்கள் உங்களிடம் பயணத்தின் போது இல்லை என்று வைத்துக்கொள்வோம். இத்தகைய சூழலில் போக்குவரத்துப் போலீஸார் உங்களுக்கு அபராதம் விதித்தால் நீங்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி அப்போதைய கடுமையான அபராதத்திலிருந்து தப்பிக்கலாம்.


ஆவணங்கள் கையில் இல்லாமல் வீட்டில் இருந்தால் நீங்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொள்ளலாம். அடுத்த 15 நாட்களுக்குள் நீங்கள் தகுந்த போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து உங்களது 100 ரூபாயையும் திருப்பி வாங்கிக்கொள்ளலாம்.ஆனால், 15 நாட்களுக்கு மேல் ஆனால் அபராதம் இன்னும் கடுமையானதாக மாறி நடவடிக்கையும் எடுக்கப்படும். இது ஆவணங்கள் கையில் இல்லாமல் ஆனால், வீட்டிலிருக்கிறது என்றால் மட்டுமே உங்களைக் கடுமையான அபராதத்திலிருந்து இந்த விதிமுறை காப்பாற்றும். மற்றபடி ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவதற்கெல்லாம் தப்பிக்க வழியில்லை” என்றும் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் அமேசான் - காற்று மாடுபாடைக் குறைக்க புது திட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன?
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்