Home /News /automobile /

கோர விபத்தில் சைரஸ் மிஸ்திரி மரணம்.. சீட் பெல்ட் அணிவதில் கிடுக்குப்பிடி... மத்திய அரசு திட்டம்

கோர விபத்தில் சைரஸ் மிஸ்திரி மரணம்.. சீட் பெல்ட் அணிவதில் கிடுக்குப்பிடி... மத்திய அரசு திட்டம்

காட்சி படம்

காட்சி படம்

இனி வரும் காலங்களில் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது போன்ற அறிக்கை வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • tamil nadu, India
சமீபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்ட்ரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் மிகவும் பாதுகாப்பான BMW காரில் பயணம் செய்திருந்தாலும் இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அவர் பின் பக்க சீட்டில் அமர்ந்திருந்ததும், சீட் பெல்ட் அணியாமல் இருந்ததும் முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது.

இது போன்ற விபத்துகள் மேலும் நடக்காமல் தடுக்க புதிய சாலை விதிமுறைகளை இந்திய அரசு அமல்படுத்த உள்ளது. அடுத்த மூன்று நாட்களில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என மத்திய சாலை நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

also read : இந்த எலெக்ட்ரிக் காரை விட இந்த பேட்டரியின் விலை அதிகமாம்.!



சைரஸ் மிஸ்ட்ரி யின் மரணத்தை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்னர் காரின் பின் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருக்கும் போது அது எவ்வாறு முன்பக்க சீட்டில் பாதுகாப்பாக இருப்பவரையும் பாதிக்கிறது என்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆனது. அதில் அதிவேகமாக சொல்லும் காரொன்று விபத்துக்குள்ளாகும் போது முன்பக்க சீட்டில் இருப்பவர் சீட் பெல்ட் போட்டு பாதுகாப்பாக இருந்தாலும், பின்பக்கத்தில் சீட் பெல்ட் இல்லாமல் இருப்பவர் வண்டியின் வேகத்தால் முன்னே தூக்கி எறியப்பட்டு அதன் மூலம் முன்பக்கம் இருப்பவரும் படுகாயம் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே இதைப் பற்றிய அறிவிப்பும் விதிமுறைகளும் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என அனைவரும் நினைத்திருந்த நிலையில் இப்படி ஒரு அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ளார். இதைப் பற்றி மேலும் பேசிய அவர்”இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது முக்கியமாக 18ல் இருந்து 34 வயதுக்குட்பட்டோர் மிக அதிக அளவில் விபத்துகளை சந்திக்கின்றனர்.



நான் அமைச்சராக பொறுப்பேற்று இந்த எட்டு வருடங்களில் எத்தனையோ விஷயங்களை சாதித்து விட்டாலும் இந்த சாலை விபத்துகளை தடுப்பதில் மட்டும் என்னால் முழு அளவில் வெற்றி அடைய முடியவில்லை” என அவர் தெரிவித்தார். எனவே இந்த சாலை விபத்துக்களை பெரும் அளவில் குறைக்கும் பொருட்டு புதிய போக்குவரத்து விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதில் பின் சீட்டில் அமர் பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற இந்த புதிய விதிமுறையும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அனைத்து கார்களிலும் காரின் ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாவிட்டால் ஒருவித அலாரம் ஒலிக்கும் இனி காரின் பின்புறம் அமர்ந்து இருப்பவர்களுக்கும் அதே விதமான அலாரம் ஒலிக்கும் வகையில் கார்களை தயாரிக்குமாறு உத்தரவிடுவதற்கு அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Car, Car accident, Vehicle

அடுத்த செய்தி