விபத்தால் மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு- புதிய மோட்டார் வாகனச் சட்டம்

அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் மக்களவையில் இந்த மோட்டார் வாகனச் சட்ட மசோதா விரைவில் நிறைவேறும் எனக் கூறப்பட்டுள்ளது.

விபத்தால் மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு- புதிய மோட்டார் வாகனச் சட்டம்
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: July 12, 2019, 2:53 PM IST
  • Share this:
சாலைப் பயணத்தின் போது விபத்தால் மரணம் அடைபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என புதிய மோட்டார் வாகனச் சட்டம் எடுத்துரைக்கிறது.

2019 புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் விபத்தில் மரணம் அடைபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும் படுகாயம் அடைபவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ளார்.

நிதின் கட்காரி எழுத்துமொழி அறிவிப்பாக வெளியிட்டுள்ள குறிப்பில், “சாலை விபத்தில் தவறு ஏதும் இன்றி சிக்கி மரணம் அடைபவர்களுக்கான நஷ்ட ஈடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், லைசென்ஸ் விதிமுறை, விதிமீறுவோருக்கான அபாரதம் வசூலிப்பு ஆகியவற்றை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில், வாகன பரிசோதனை, பழுதப்பட்ட வாகனங்களுக்கான நடைமுறைகள், எலெக்ட்ரிக் வாகன நடைமுறை, சாலைப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் புதிய சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் மக்களவையில் இந்த மோட்டார் வாகனச் சட்ட மசோதா விரைவில் நிறைவேறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: டிமாண்ட் இல்லாததால் வாகன உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading