ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியா முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்... மத்திய அரசு தகவல்!

இந்தியா முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்... மத்திய அரசு தகவல்!

இந்தியா முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்

இந்தியா முழுவதும் விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்

Vande Bharat Express | பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. டெல்லி - காத்ரா, டெல்லி - வாரணாசி, குஜராத் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசம் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 7 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

8வது வந்தே பாரத் அதிவேக ரயில் : இந்நிலையில், செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதம்ர் மோடி, இந்தியா எல்லாவற்றிலும் சிறந்ததை விரும்புகிறது என்பதைக் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுவதாக கூறிய பிரதமர். இது புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் எனக் கூறினார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட பணிகள் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயை முற்றிலும் மாற்றி அமைக்கும் என பிரதமர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தவாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய 8வது வந்தே பாரத் அதிவேக ரயில் ஆகும். இது தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு தெலுங்கு பேசும் மாநிலங்களை இணைக்கும் முதல் ரயில். இந்த ரயில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா நிலையங்களிலும், தெலுங்கானாவில் உள்ள கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 400 வந்தே பாரத் ரயில்கள்

இந்த நிலையில் இந்திய ரயில்வேக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த 400 ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களில் 100 ரயில்கள் 'டில்டிங் ரயில்' தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்டிங் ரயில் என்பது சாதாரண ரயில் பாதைகளில் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பம் கொண்ட ஒரு ரயில் ஆகும். வளைந்து செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போல், வளைவுகள் கொண்ட ரயில் பாதையிலும் அதிக வேகத்தில் ரயில்களை இயக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அனைத்து அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட அனைத்து அதிவேக ரயில்களையும் படிப்படியாக மாற்றியமைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள், அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் இருந்து அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக ஆற்றல் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

வரும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

2023-24 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் திட்டங்களில் 300-400 புதிய ரயில்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய மோடி அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை புதிய வந்தே பாரத் ரயில்களில் ஸ்லீப் கோச்சுடன் கூடிய புதிய வந்தே பாரதத்தையும் அறிவிக்கலாம்.

First published:

Tags: PM Narendra Modi, Vande Bharat