• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விமானப் போக்குவரத்தை கையாள்வதில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கொச்சின் சர்வேதச விமான நிலையம்!

விமானப் போக்குவரத்தை கையாள்வதில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கொச்சின் சர்வேதச விமான நிலையம்!

கொச்சின் சர்வேதச விமான நிலையம்

கொச்சின் சர்வேதச விமான நிலையம்

ஊரடங்கு மற்றும் தொழில் துறை பாதிப்பிலிருந்து உலகம் மீளத் துவங்கியுள்ளது. “அனைத்து துறைகளும் தற்போது மீண்டு வருகிறது. இதில் சர்வதேச விமானப் போக்குவரத்தும் அடங்கும்.

  • Share this:
CIAL, கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட், ஜூலை 2021 முதல் தொடர்ச்சியாக சர்வதேச போக்குவரத்தைக் கையாள்வதில் நாட்டில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொச்சின் விமான நிலையம் ஜூலை மாதத்தில் 85,395, சர்வதேசப் பயணிகளையும், ஆகஸ்டு மாதம் 1,57,289 சர்வதேசப் பயணிகளையும், மற்றும் செப்டம்பர் மாதம் 1,94,900 சர்வதேசப் பயணிகளையும், கையாண்டது. செப்டம்பர் மாதத்தில் மட்டும், சர்வதேச பயணிகள் மற்றும் உள்நாட்டுப் பயணிகள் என்று இரண்டையும் உள்ளடக்கிய மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை 3,70,044 என்று CIAL தெரிவித்துள்ளது.

இந்த விமான நிலையம் நாளொன்றுக்கு 106 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இயக்கங்கள் மற்றும் சராசரியாக 14,500 விமானப் பயணிகளை கையாள்கிறது. கொச்சினில் இருந்து அனைத்து மத்திய கிழக்கு நாடுகள் உட்பட மேல், லண்டன் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கு விமான சேவையை வழங்குகிறது என்று CIAL தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு விமானங்கள் கொச்சினிலிருந்து தொடர்ச்சியான விமான சேவைகளை அட்டவணைப்படுத்தி இருப்பதால், அக்டோபர் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கக் கூடும் CIAL கணித்துள்ளது. சமீபத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்புவிலிருந்து தன்னுடைய தினசரி விமான சேவையை கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

“இதையொட்டி, அக்டோபர் மாதத்தில், நாளொன்றுக்கு 58 சர்வதேச விமானங்களின் வருகை/புறப்பாடுகளை CIAL கையாள்கிறது” என்று கூறப்பட்டது.

CIAL நிர்வாக இயக்குனரான எஸ். சுஹாஸ், செப்டம்பர் மாதம் கணிசமான அளவு விமானப் போக்குவரத்து அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சர்வதேச விமானங்கள் இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Also read... தொடர்ந்து ஆறு முறையாக உலகின் மிக சிறந்த ஏர்லைன் இதுதான் - ஏன் தெரியுமா ?

ஊரடங்கு மற்றும் தொழில் துறை பாதிப்பிலிருந்து உலகம் மீளத் துவங்கியுள்ளது. “அனைத்து துறைகளும் தற்போது மீண்டு வருகிறது. இதில் சர்வதேச விமானப் போக்குவரத்தும் அடங்கும். சர்வதேச நோய்த்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த விமானப் போக்குவரத்தில் 70% அளவுக்கு, தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தும் இயக்கங்களும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. அது மட்டுமின்றி, குளிர்காலத்தில் இயல்பாக காணப்படும் விமானப் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது” என்று சுஹாஸ் தெரிவித்தார்.

அக்டோபர் 3 முதல், கொழும்புவிலிருந்து கொச்சினுக்கு தினசரி விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 165, COK- கொச்சின் விமான நிலையத்துக்கு காலை 09.45 மணிக்கு வந்தடையும். விமானம் UL 166 ஆக, காலை 10.45 மணிக்கு, கொழும்புவுக்கு திரும்பும். ஞாயிறு தவிர்த்து, அனைத்து நாட்களிலும் இதே நேரத்தில் இந்த சேவை உண்டு. ஞாயிற்று கிழமைகளில், கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வருகை புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 08.45 மணிக்கு கொச்சின் விமான நிலையும் வந்தடையும் ஸ்ரீலங்கன் விமானம், காலை 09.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: