ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

சிஎன்ஜி vs ஹைபிரிட் கார் - குறைந்த செலவில் இயங்கும் வாகனம் எது?

சிஎன்ஜி vs ஹைபிரிட் கார் - குறைந்த செலவில் இயங்கும் வாகனம் எது?

சிஎன்ஜி vs ஹைபிரிட் கார்

சிஎன்ஜி vs ஹைபிரிட் கார்

இந்த இரண்டு மாடல் வாகனங்களிலும் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அதைப்போலவே எண்ணற்ற குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் இரண்டு வாகனங்களின் தேவைகளும் வெவ்வேறாக இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயு காரணமாக உலகெங்கிலும் உள்ள மாநகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிக மோசமாகியுள்ளது. இத்தகைய நிலையில், மாசுபாடு முற்றிலும் இல்லாத அல்லது குறைவான போக்குவரத்து மாடலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  குறிப்பாக ஈவி எனப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டிற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அதே சமயம், எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அல்லது மிக அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாகி பயன்பாட்டிற்கு வரும் வரையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

  அந்த வகையில் அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி (Compressed Natural Gas வாகனங்கள் அல்லது ஹைபிரிட் என்ஜின்களை கொண்ட வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இந்திய சந்தையில் வெகு காலமாகவே சிஎன்ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஹைப்ரிட் வாகனங்கள் இப்போது தான் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு மாடல் வாகனங்களிலும் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அதைப்போலவே எண்ணற்ற குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் இரண்டு வாகனங்களின் தேவைகளும் வெவ்வேறாக இருக்கிறது.

  Read More : பயன்படுத்திய பைக்குகளை வாங்கும் மோகம் அதிகரிப்பு.. பீப்கார்ட்டில் குவியும் கூட்டம்.. ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி!

  சிஎன்ஜி கார் வாங்குவதன் பயன்கள் என்ன?

  முதல் விஷயம் என்னவென்றால் சிஎன்ஜி வாகனங்களையும் நாம் ஹைப்ரிட் வாகனங்களாகக் கருதலாம். ஆனால், அவை அப்படி அழைக்கப்படுவதில்லை. சிஎன்ஜி வாகனம் ஏன் ஹைப்ரிட் ஆக உள்ளது என்றால் அதனை நீங்கள் பெட்ரோல் மூலமாகவும் இயக்கலாம் அல்லது சிஎன்ஜி வாயு மூலமாகவும் இயக்கலாம். இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது எவ்வளவு அதிக தொலைவுக்கு நீங்கள் பயணம் செய்ய முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  உதாரணத்திற்கு, உங்கள் காரின் பெட்ரோல் டாங்க் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது லிட்டருக்கு 15 கி.மீ. மைலேஜ் கொடுத்தால் நீங்கள் 450 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய முடியும். அதே சமயம், உங்கள் வாகனத்தி பெட்ரோல் காலியாகிவிட்டாலும் கூட சிஎன்ஜி வாயு மூலமாக மேற்கொண்டு தோராயமாக 200 கி.மீ. வரையிலும் பயணம் செய்யலாம். ஆக, மொத்தம் உங்களால் 650 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்ய முடிகிறது.

  பெட்ரோலை காட்டிலும் சிஎன்ஜி குறைவான விலை கொண்டது என்பதால், உங்களின் வாகன இயக்க செலவும் குறைகிறது. மேலும், சிஎன்ஜி என்பது குறைவான மாசுவை வெளிப்படுத்தும் பசுமை எரிபொருள் ஆகும். அதே சமயம், பெட்ரோல் காரை காட்டிலும், சிஎன்ஜி பயன்படுத்தக் தகுந்த கார் விலை கொஞ்சம் அதிகம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

  Read More : எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 90 சதவீத பங்குகளுடன் முன்னணி வகிக்கும் டாடா நிறுவனம்.!

  ஹைப்ரிட் கார் வாங்குவதன் பலன்கள் என்ன?

  ஹோண்டா, மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் சார்பில் இந்தியாவில் ஹைபிரிட் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் தரக் கூடியவை. அதாவது, பெட்ரோல் மூலமாக கிடைக்கும் மைலேஜை காட்டிலும் சுமார் 20 கி.மீ. அதிகம் கிடைக்கும். ஆனால், ஹைப்ரிட் கார்களில் பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும்.

  நாடெங்கிலும் பெட்ரோல் நிலையங்கள் அதிகம் என்ற நிலையில், எரிவாயு தீரும்போது உடனுக்குடன் நீங்கள் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் குறைவு என்பதால் உடனுக்குடன் நிரப்ப முடியாது.

  சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் கார்

  நீங்கள் தேர்வு செய்யும் கார் மாடல், தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் நீங்கள் பயணம் செய்யக் கூடிய தொலைவு ஆகியவற்றை பொறுத்து செலவினம் மாறுகிறது. ஆனால், செயல்திறன் அடிப்படையில் பார்க்கப் போனால், ஹைபிரிட் கார்கள் தான் உங்களுக்கு அதிக பலனை தருவதாக அமையும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Automobile, Car