போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்த முதல்வர்...!

போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்த முதல்வர்...!
  • News18
  • Last Updated: February 7, 2020, 2:43 PM IST
  • Share this:
போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று துவங்கி வைத்தார்.

மோட்டார் வாகன உற்பத்தியில் கேந்திரமாக சென்னை உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தின் மூலம், வர்த்தகத்தை பெருக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


இதற்காக  சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 28 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பல்வேறு மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ள நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் அமைந்துள்ள இந்த பாேர்டு நிறுவனத்தின்  கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மோட்டார் வாகன உற்பத்திக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: February 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading