Home /News /automobile /

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் பேட்டரியை உருவாக்கும் சீன நிறுவனம்.!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் பேட்டரியை உருவாக்கும் சீன நிறுவனம்.!

மாதிரி படம்

மாதிரி படம்

Electric Battery | மூன்றாம் தலைமுறை செல்-டு-பேக் (CTP) தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ள இந்த பேட்டரிக்கு சீன புராணங்களில் இடம்பெற்றுள்ள 'கிலின்' (Qilin) என்ற பழம்பெரும் உயிரினத்தின் நினைவாக பேட்டரிக்கு Qilin என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    எரிபொருள் விலையேற்றம் மற்றும் சுறுப்புற சூழல் பாதுகாப்புக்காக கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியாக நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சீனாவின் முன்னணி ஆட்டோமோட்டிவ் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பு நிறுவனமான கன்டெம்பரரி ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜி கோ லிமிடெட் (Contemporary Amperex Technology Co Ltd - CATL), தான் தயாரிக்க போகும் ஒரு புதிய பேட்டரியை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி எலெக்ட்ரிக் வாகனங்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 1,000 கிமீக்கு மேல் ஓட வைக்கும் திறன் கொண்டதாக புதிய பேட்டரி இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.

    மூன்றாம் தலைமுறை செல்-டு-பேக் (CTP) தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ள இந்த பேட்டரிக்கு சீன புராணங்களில் இடம்பெற்றுள்ள 'கிலின்' (Qilin) என்ற பழம்பெரும் உயிரினத்தின் நினைவாக பேட்டரிக்கு Qilin என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி CTP 3.0 என்றும் குறிப்பிடப்படும் என்று சீன செய்தி நிறுவனமான Xinhua தெரிவித்துள்ளது. CATL வெளியிட்டுள்ள தகவலின்படி Qilin பேட்டரிகள் விரைவில் உற்பத்தி செய்ய துவங்கப்பட்டு 2023-ல் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    வரவிருக்கும் இந்த பேட்டரி 72% அளவிலான பயன்பாட்டு திறன் மற்றும் 255 Wh/kg வரை டெர்னரி பேட்டரி அமைப்புகளுக்கான ஆற்றல் அடர்த்தியை கொண்டிருக்கும். மேலும் இந்த பேட்டரி உலகிலேயே மிக உயர்ந்த இன்டக்ரேஷன் லெவலை தரும் என்று CATL கூறுகிறது. மாடியூல்ஸ் (modules) இல்லாமல் செல்களை நேரடியாக பேக்குகளில் ஒருங்கிணைப்பதன் மூலம், CTP தொழில்நுட்பமானது சிஸ்டம் எனர்ஜி டென்சிட்டியை மேம்படுத்துகிறது, உற்பத்தியை எளிதாக்குகிறது மற்றும் செலவுகளைக் குறைக்க உதவுகிறது. தவிர CTP 3.0 பேட்டரி பாதுகாப்பு, சார்ஜிங் வேகம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் மேம்பாடுகளை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    புதிய EV பேட்டரி உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லாவால் திட்டமிடப்பட்டதை விட குறைந்தது 13 சதவீதம் அதிக சக்தி வாய்ந்தது என்று CATL கூறுகிறது. சீன EV பேட்டரி தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பேட்டரி ஏற்கனவே இருக்கும் செல்களை விட வேகமாக சார்ஜ் செய்ய முடியும். தற்போது சந்தையில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் கார் பேட்டரிகளை விட புதிய பேட்டரி பாதுகாப்பானது மற்றும் நீடித்தது என்றும் நிறுவனம் கூறுகிறது. Tesla, Volkswagen மற்றும் BMW உள்ளிட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட CATL, சீனாவின் நான்கு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 45 பில்லியன் யுவான் (சுமார் ₹52,425 கோடி) நிதி திரட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய EV பேட்டரி உற்பத்தியாளராக இருந்தாலும், சமீபத்திய மாதங்களில் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட சவால்களைத் தவிர மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக CATL லாபத்தை பார்க்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வரவிருக்கும் புதிய பேட்டரியை ஃபாஸ்ட் மோடில் சார்ஜ் செய்ய சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Electric Cars

    அடுத்த செய்தி