டெஸ்லா கார்களுக்கு திடீர் தடை - சீன ராணுவம் அதிரடி உத்தரவு!

டெஸ்லா கார்களுக்கு திடீர் தடை

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், சீனாவிலும் கார் உற்பத்தியை செய்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெஸ்லா கார்களை ராணுவ பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய சீன ராணுவம் அதிரடி தடை விதித்துள்ளது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனமான டெஸ்லா எலக்டிரிக் கார் உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், சீனாவிலும் கார் உற்பத்தியை செய்து வருகிறது. ஷாங்காய் நகருக்கு அருகே டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது. சீனாவில் எலக்டிரிக் கார் தயாரிப்பில் பல முன்னணி நிறுனவங்கள் இருந்தாலும், டெஸ்லாவின் கார்கள் அந்நாட்டு மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

எலக்டிரிக் கார் உற்பத்தியில் டெஸ்லா நிறுவனத்துக்கு மிகப்பெரிய சந்தையாகவும் சீனா மாறியுள்ளது. இந்நிலையில், டெஸ்லா எலக்டிரிக் கார்களுக்கு சீன ராணுவம் திடீரென தடை விதித்துள்ளது. ராணுவ பகுதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்குள் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த கார்கள் நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லது ராணுவ பகுதிகளுக்குள் செல்ல வேண்டிய நபர்கள் இருந்தால், அவர்கள் கொண்டு வரும் டெஸ்லா நிறுவன கார்களை ராணுவப் பகுதிக்கு வெளியே நிறுத்திவிட்டு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு அம்சத்துக்காக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நிறுவன எலக்டிரிக் கார்களைக்காட்டிலும் டெஸ்லா நிறுவன எலக்டிரிக் கார்களில் அதிகளவிலான கேமராக்களும், சென்சார்களும் உள்ளன. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துவாறு காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை பார்க்கும் வசதி அந்த கார்களில் உள்ளன. தடை குறித்து வெளியாகியிருக்கக்கூடிய தகவலில், டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் அதிக சென்சார் மற்றும் கேமராக்கள் இருப்பதால், அதன் வழியே டேட்டாகளை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

காரில் இருக்கும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் எந்தமாதிரியான தகவல்களை சேகரிக்கின்றன என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை என கூறியள்ள சீன ராணுவம், டெஸ்லா நிறுவனமும் அந்த தகவலை ராணுவத்துடன் பகிர்ந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் டெஸ்லா கார்களுக்கு ராணுவ பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தடை குறித்து, டெஸ்லா நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

Also read... மார்ச் மாதம் முழுவதும் நீங்கள் வாங்கும் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சூப்பர் ஆஃபர்கள் அறிவிப்பு

எலக்டிரிக் கார் விற்பனையில் முன்னணி சந்தையாக இருந்த சீனாவில் டெஸ்லா கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை மற்றும் கட்டுப்பாடுகள் அந்த நிறுவனத்தின் விற்பனையில் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்கா சீன நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடுவதால், அதற்கு பதிலடியாக அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக சீனா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே 5 ஜி தொழில்துட்ப போட்டி எலான் மஸ்குக்கும், சீனாவுக்கும் இடையே இருப்பதால், இந்த விவகாரத்தின் எதிரொலியாவும் தடை இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: