’பார்ப்பதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்’- நியூஸ் 18 மற்றும் DIAGEO முயற்சி

’பார்ப்பதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்’- நியூஸ் 18 மற்றும் DIAGEO முயற்சி
Road to safety
  • News18
  • Last Updated: May 27, 2019, 4:38 PM IST
  • Share this:
வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பு என்பது மிகவும் முக்கிய அம்சமாகும். தலையைப் பாதுகாக்க ஹெல்மெட் அணிவது அவசியம். பாதுகாப்பாக இருப்பதுதான் முக்கியம். வேகமாகச் சென்று ஒரு இடத்தை அடைவதைப் பற்றி மட்டும் யோசிக்காமல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நினைத்துப் பார்ப்பது முக்கியம். இதைத்தான் அரசு, “Sadak Surakhsa Jivan Raksha” என்ற திட்டம் மூலம் சொல்கிறது.

பாதுகாப்பான வாகனப் பயணத்தைத்தான் பலரும் விழிப்புணர்வு பிரசாரங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த வகையில் சாலைப் பாதுகாப்புக்காக நெட்வொர்க் 18 மற்றும் DIAGEO இணைந்து ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறது. ‘சொல்வதை செயல்படுத்துவோம்’ என்ற கூற்றுக்கு ஏற்ப சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வளர்ந்த பெரியவர்களைவிட குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் உள்வாங்கிக்கொள்வார்கள். பெற்றோர்கள் சாலைப் பாதுகாப்புக்கான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்றி குழந்தைகளுக்கான ஒரு முன்னுதராணமாக இருக்க வேண்டும். இந்த விளம்ப்ரம் ஒரு தந்தையில் செயல்பாடுகள் மூலம் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், அப்பாவைப் போல் செயல்படும் குழந்தை அப்பா சீட் பெல்ட் அணியாததால் குழந்தையும் அணியவில்லை. “எதைப் பார்க்கிறார்களோ அதைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்”. கற்றுக்கொடுக்கும் இவ்வகையான விளம்பரம் நமக்கும் ஒரு நல்ல உதாரணமாக அமையும். இதுதான் சமூகத்திலும் வெளிப்படும்.


இந்தக் காட்சி ஒரு சாலையின் சிக்னல் நிறுத்தத்தில் நடக்கிறது. இந்த ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக பல நிகழ்வுகளை இணைக்கிறது. இந்த ஒரு நிகழ்வு தொடர்ந்து எவ்வளவு பேரின் எண்ணத்தை மாற்றுகிறது. இந்த வீடியோ மூலம் நீங்களும் அதைத் தெரிந்துகொள்வீர்கள்.

நிற வேறுபாடுகள் மூலமும் இந்தத் தகவலை இந்த விளம்ப்ரம் தெளிவுபடுத்துகிறது. இந்த விளம்ப்ரம் சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை வலியுறுத்துவதாகவே உள்ளது.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் உங்களுக்காக உங்கள் பாதுகாப்புக்காக உள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த வீடியோ இதுகுறித்து மட்டுமல்லாமல் குழந்தை வளர்ப்பு குறித்தத் தகவலையும் இதன் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் உதவும். நியூஸ் 18 மற்றும் DIAGEO முயற்சி ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும் முயற்சி ஆகும். இந்திய சாலைகளைப் பாதுகாப்பாக வைக்க இந்த வீடியோவைப் பாருங்கள்:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்