ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

சென்னை மெட்ரோ : ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க திட்டம்

சென்னை மெட்ரோ : ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க திட்டம்

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ

Chennai Metro | சென்னை மெட்ரோ அதன் இரண்டாம் கட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஓட்டுநர் இல்லாத அதாவது டிரைவர்லெஸ் ரயில்களை (driverless trains) அறிமுகப்படுத்தும் என்று சென்னை மெட்ரோ ரயில் (சிஸ்டம்ஸ்-ஆபரேஷன்ஸ்) இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக தலைநகரான சென்னையில் பயணம் செய்ய விரும்பும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுள் முக்கியமான ஒன்று மெட்ரோ ரயில் திட்டம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் படி தற்போது பணிகள் நடைபெற்று வரும் இரண்டாம் கட்டத்தின் கீழ் வருகின்ற 2026-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட நீட்டிப்பு (Phase-I extension) கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 3,770 கோடி ஆகும்.

இதனிடையே இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கம் 128 ஸ்டேஷன்களுடன் 118.9 கிலோமீட்டர் நெட்வொர்க்காக திட்டமிடப்பட்டுள்ளது. இது மூன்று காரிடார்களை கொண்டுள்ளது. இதில் காரிடார் -3 - மாதவரத்திலிருந்து சிப்காட் வரை (45.8 கிமீ), காரிடார் -4 - கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி பைபாஸ் (26.1 கிமீ), காரிடார்-5- மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை (47 கிமீ). இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.63246 கோடி மற்றும் இந்த திட்டத்தை 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் தற்போது மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் (சிஸ்டம்ஸ்-ஆபரேஷன்ஸ்) இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

Also Read : தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம்!

அப்போது சென்னை மெட்ரோ அதன் இரண்டாம் கட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஓட்டுநர் இல்லாத அதாவது டிரைவர்லெஸ் ரயில்களை (driverless trains) அறிமுகப்படுத்தும் என்று தகவல் தெரிவித்து உள்ளார். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த இரண்டாம் கட்டம் unattended train operation-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த மெட்ரோ ரயில்களை இயக்க டிரைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றார். சென்னை மெட்ரோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள Driverless Trains சிக்னல்களில் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய ராஜேஷ் சதுர்வேதி, சென்னை மெட்ரோவின் சேவை மக்கள் எளிதாக பயணிக்க உதவி, நகரின் வளர்ச்சியை தக்கவைத்து வருகிறது. நாங்கள் சமீபத்தில் MTC உடன் இணைந்து 10 லாஸ்ட்-மைல் கனெக்டிவிட்டி பேருந்துகளை இயக்குக்கிறோம். இந்த பட்டியலில் மேலும் 12 பேருந்துகள் சேர்க்கப்படும் என்றார். கடந்த மாதத்தில் தினசரி யூஸர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டுள்ளது.

Also Read : ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

தினசரி யூஸர்களுக்கு வசதிகளை வழங்குவது பற்றி மேலும் பேசிய ராஜேஷ் சதுர்வேதி, வாடிக்கையாளர்கள் எளிதாக டிக்கெட்டுகளை வாங்குவதை உறுதிசெய்ய நிலையான QR குறியீடுகளையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். தவிர லாஸ்ட்-மைல் கனெக்டிவிட்டியை உறுதிப்படுத்த ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்களுடன் ஒத்துழைத்தோம். இதற்கான முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன என்றார். இறுதியாக சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ஓட்டுநர் இல்லா ரயில்கள்

2026-ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Published by:Selvi M
First published:

Tags: Chennai metro, Tamil News