ஹோண்டா ஆக்டிவா 6ஜி மற்றும் ஹோண்டா ஷைன் 125 சிசி ஆகிய ஸ்கூட்டர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிப்பு!

ஹோண்டா ஆக்டிவா 6 ஜி

ஹோண்டா நிறுவனம் அங்கீகரித்த வங்கிகளிடமிருந்து மட்டுமே இந்த வசதியை பெறமுடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் ஸ்கூட்டராகும். மேலும் தற்போது நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்றால் அது ஹோண்டா ஆக்டிவா தான். கடந்த 2,000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 2.5-க்கும் மேற்பட்ட கோர் யூனிட்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு, ஹோண்டா ஆக்டிவா தனது புதிய ஹோண்டா ஆக்டிவா 6 ஜி (Honda Activa 6G) மற்றும் ஹோண்டா ஷைன் 125சிசி (Honda Shine 125CC) ஆகிய ஸ்கூட்டர்களில் சிறந்த ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது.

நிறுவனம் அறிவித்துள்ள சலுகையின் படி, ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் 100 சதவீத நிதியுதவியை பெறலாம். இருப்பினும், நீங்கள் ஸ்கூட்டரை வாங்கும் போது ஹோண்டா நிறுவனம் அங்கீகரித்த வங்கிகளிடமிருந்து மட்டுமே இந்த வசதியை பெறமுடியும். இதுதவிர, ரூ .5000 கேஷ்பேக் சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் EMI பயன்முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

ஹோண்டா ஆக்டிவா 6 ஜி இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதாவது, STD மற்றும் DLX என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது. இவை எக்ஸ்ஷோரூம் டெல்லி விலைப்படி, ஹோண்டா ஆக்டிவா 6 ஜி எஸ்.டி.டி வேரியண்ட் ரூ.66,799-க்கும், அதன் டி.எல்.எக்ஸ் வேரியண்ட் ரூ.68,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,499 குறைந்த கட்டண விருப்பத்தையும் வழங்குகிறது. அதே நேரத்தில் வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், ஹோண்டா ஷைன் (Honda Shine 125CC) ஸ்கூட்டரில் மேற்கண்ட அதே தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

Also read... பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் டயர் ஷோரூம் - சியட் நிறுவனத்தின் புதிய முயற்சி!

ஹோண்டா ஷைன் 125 சிசி நிறுவனத்தின் அதிக விற்பனையான பைக் ஆகும். ஹோண்டா ஷைன் ஸ்கூட்டரின் விலை ரூ.70,478 முதல் ஆரம்பமாகிறது. இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை எத்தனை நாட்கள் இருக்கும் என்றும் தெரியவில்லை. தள்ளுபடிக்கான கடைசி தேதியை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை. ஹோண்டா ஆக்டிவா 6 ஜி ஸ்கூட்டரில் 109.51 சிசி பிஎஸ் 6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இது 7.68 பிஹெச்பி மற்றும் 8.79 எம்என் டார்க் திறனை உருவாக்குகிறது. ஹோண்டா ஆக்டிவா 6 ஜி-யின் எடை 107 கிலோ மற்றும் 5.3 லிட்டர் பியூயல் டேங்க் வசதியை கொண்டுள்ளது. இது டிரம் பிரேக்குகள் மற்றும் குழாய் இல்லாத டயர்களுடன் வருகிறது. மேலும், செல்ப்-ஸ்டார்ட் தவிர ஸ்கூட்டரில் LED ஹெட்லேம்ப்கள், டூயல் லிட் எக்ஸ்டெர்னல் பியூயல் பில் மற்றும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன. ஹோண்டா ஆக்டிவா 6 ஜி இரண்டு வகைகளிலும் 8 வகை கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: