Home /News /automobile /

இந்தியாவில் 2025க்குள் 1.8 லட்சம் கி.மீ. நெடுஞ்சாலைகள்; 1.2 லட்சம் கி.மீ. ரயில் பாதைகள் அமைக்கத் திட்டம்!

இந்தியாவில் 2025க்குள் 1.8 லட்சம் கி.மீ. நெடுஞ்சாலைகள்; 1.2 லட்சம் கி.மீ. ரயில் பாதைகள் அமைக்கத் திட்டம்!

இந்தியாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் விரிவுபடுத்தி அமைக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் விரிவுபடுத்தி அமைக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக பார்க்கப்படும் ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தில் 2025ம் ஆண்டுக்குள் மத்திய அரசு என்னென்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்பது தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்துடனும் தன்னிறைவுடனும் இருக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக 2025ம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு, பெட்ரோலிய பொருட்கள், சுகாதாரம், கல்வி, தொழில்துறை ஆகிய துறைகளின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காகப் பார்க்கப்படும் ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தில் 2025ம் ஆண்டுக்குள் மத்திய அரசு என்னென்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.

    ரயில் மற்றும் சாலை போக்குவரத்து:

    பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டில் இதற்கு முன்னதாக செய்யப்பட்ட அனைத்து சாதனைகளையும் முறியடிக்க இந்தியா தயாராகி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை விட, 2025ம் ஆண்டின் இறுதியில் மாவட்டந்தோறும் அதிக நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1.2 லட்சம் கிலோமீட்டருக்கு ரயில் பாதைகளும், 1.8 லட்சம் கிலோமீட்டருக்கு நெடுஞ்சாலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    நாடு முழுவதும், 1950ம் ஆண்டு 4 ஆயிரம் கிலோமீட்டராக இருந்த நெடுஞ்சாலைகள் 2015ம் ஆண்டு 77 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் இதன் அளவை இருமடங்காக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 2025ம் ஆண்டுக்குள் 1.8 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையான ரயில்வே-யைப் பொறுத்தவரையில், 1950 இல் 10,000 கிலோமீட்டராக இருந்த இரும்பு பாதை, 2015ம் ஆண்டு 63 ஆயிரம் கிலோ மீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை 2025ம் ஆண்டுக்குள் 1.2 லட்சம் கிலோமீட்டராக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    Also Read : குறைந்த விலையில் 5ஜி ஃபோன் அறிமுகம் - ரிலையன்ஸின் புதிய அறிவிப்பு!

    துறைமுகங்களின் செயல் திறன்:

    1955ல் ஆண்டுக்கு 777 மில்லியன் டன்களாக இருந்த (MTPA) துறைமுகத்தின் திறன் 2015ல் ஆண்டுக்கு 1,911 மில்லியன் டன்களாக உயர்த்தப்பட்டது. தற்போது 2025ம் ஆண்டுக்குள் துறைமுகத் திறன் ஆண்டுக்கு 3 ஆயிரம் மில்லியன் டன்களாக உயர்த்தப்பட உள்ளது.

    2015ல் 56 சதவீதமாக இருந்த சமையல் எரிவாயு பயன்பாடு 2021ம் ஆண்டு 100 சதவீதத்தை எட்டியுள்ளது. 2000ம் ஆண்டின் நிலவரப்படி 56 சதவீத வீடுகளில் மட்டுமே மின்சார வசதி இருந்த நிலையில், தற்போது அது 96 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு 2.5 மில்லியனாக இருந்த குழாய் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை இப்போது 10 மில்லியனாக அதிகரித்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Central government, Highways Department, Indian Railways

    அடுத்த செய்தி