பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் டயர் ஷோரூம் - சியட் நிறுவனத்தின் புதிய முயற்சி!

பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் டயர் ஷோரூம்

சியட் ஷோரூம்கள் பெண்கள் குழுவால் சொந்தமாகவே நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் இதற்காக முதல் ஷோரூமையும் சியட் நிறுவனம் திறந்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வரும் பிரபல நிறுவனங்களில் சியட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய டயர் ஷோரூமை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றது.

  பொதுவாக வாகனம் சார்ந்து இயங்கும் அனைத்து துறைகளிலும் ஆண்களின் ஆதிக்கமே அதிகளவில் தென்படுகின்றது. இந்த நிலையை உடைக்கும் நோக்கிலேயே சியட் நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே இயங்கக் கூடிய டயர் ஷோரூமை திறந்திருக்கின்றது. அனைத்து சியட் ஷோரூமிலும் பெண்களை மேம்படுத்துவதற்கான சியட்டின் முயற்சியாக இது இருக்கும், குறிப்பாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் டயர் துறையில் இத்தகைய புது முயற்சியை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

  அதன்படி சியட் ஷோரூம்கள் பெண்கள் குழுவால் சொந்தமாகவே நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் இதற்காக முதல் ஷோரூமையும் சியட் நிறுவனம் திறந்துள்ளது. தற்போது ஒரு ஷோரூம் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியா தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் 10 கடைக்காரர்களை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து பெண்கள் சியட் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை தொடர்பான அனைத்து உதவிகளுக்கும் பெண்கள் பணியாளர்கள் உள்ளனர். டயர்களை மாற்றுதல், வீல் பேலன்ஸிங் மற்றும் அலாய்மெண்டை ஒழுங்குப்படுத்துதல் பல்வேறு சிறப்பு சர்வீஸ்களையும் செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

  Also read... டெல்லியில் இ-ஆட்டோகளுக்கு விரைவில் பதிவு - ரூ.29,000 வரை மானியம்!

  இந்த சர்வீஸ்களையும் பெண்களே மேற்கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சியாட் கடைகளை நடத்தும் பெண்களுக்கு எண்ட் டு எண்ட் பயிற்சி அளிப்பதற்கு சியட் முதலீடும் செய்துள்ளது. இந்த ஷோரூமில் ஒரு ஆண் பணியாளரைக் கூட காண முடியாது என்கின்றது சியட். இவ்வாறு பெண்களால் மட்டுமே இயங்கக்கூடிய ஷோரூமை இந்தியாவில் நிறுவனம் திறப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து சியட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அமித் டோலானி கூறுகையில், “பணியிடத்தில் பாலின வேறுபாட்டை களைய இத்தகைய முயற்சியை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

  எங்கள் சியட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் உட்பட ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். பொறியியலாளர்கள் முதல் தலைமை பொறுப்பாளர்கள் வரை சியட் எண்ணற்ற பெண் பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அனைத்து மகளிர் சியட் ஷாப்பும் ஒரு தொழில்துறை திட்டத்தின் முதல் முயற்சியாகும், இது டயர் தொழிலில் பெண்கள் வருகையை அதிகரிக்க அனுமதிக்கும், இந்த முயற்சி இந்தத் தொழிலில் சேர இன்னும் பலரை ஊக்குவிக்கும். அடுத்த மாதங்களில் இதுபோன்ற பல விற்பனை நிலையங்களுடன் இந்தியா முழுவதும் எங்கள் முயற்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் தகவல் அளித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: