Castrol Activ-இன் #ProtectIndiasEngine பிரச்சாரம்..

நாம் ஓடிக்கொண்டே இருக்க,தொடர்ந்து உதவும் நமது அருகிலுள்ள மெக்கானிக்குகளின் மீது,நமது கவனத்தை திருப்பி ,அவர்களை ஒரு நல்ல எதிர்காலத்திற்குத் தயாராக்க, நாம் உதவ வேண்டிய நேரம் இது.

Castrol Activ-இன் #ProtectIndiasEngine பிரச்சாரம்..
castor activ
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 12:57 PM IST
  • Share this:
கடுமையான சமயங்கள் அதற்கு நிகரான கடுமையான சவால்களை உருவாக்குகின்றது. இந்தியாவின் இளைஞர்கள் நீண்டகாலமாக முரண்பாடுகளை கடந்து, உயர்ந்து, சாத்தியமற்றதை நிகழ்த்திக் காட்டுவதில் புகழ் பெற்றிருக்கிறார்கள். பரவல் தொற்றுநோய் தாக்கியபோது, ​​அதே உணர்ச்சி மலர்ந்து பிரகாசித்தது. உணவு, பராமரிப்பு மற்றும் தங்குமிடம் தேவைப்படுபவர்களுக்கு உதவ,தன்னார்வலர்கள் முன்வந்ததால் நாட்டில் ஒருபோதும் உதவும் கரங்களுக்கு பஞ்சமில்லை என்பதை உணர்த்தியது. அவர்களின் தன்னலமற்ற செயல்கள் அவர்களின் இரு சக்கர வாகனங்களால் எளிதாக்கப்பட்டன. இது அவர்களுக்கு உதவி நாடும் தொலைதூர சமூகங்களை கூட அடைய வழிவகுத்தது.

ஆனால் இது இயக்கம் மட்டுமின்றி, பொறுப்புணர்வினாலும், இரு சக்கர வாகனம் இளைஞர்களின் நெருங்கிய கூட்டாளியாகத் தோன்றி, அவர்களை மாற்றத்தின் அடையாளமாக - முகவர்களாக ஆக்குகிறது. இதுவே இருசக்கர வாகனத்தை, இளம் இந்தியாவின் அடையாளத்தின் ஒரு முக்கியமான பகுதியாக ஆக்குகிறது. தொடுவானத்தை அடைய விரும்பும் இந்த தலைமுறையின் கனவுச் சக்கரங்களை சீராக உருட்டிக்கொண்டு வருபவர்கள்,நமது நம்பிக்கைக்குரிய  அருகிலுள்ள மெக்கானிக்குகளே. பல ஆண்டுகளாக, நமது வாகனங்களை இடைவிடாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம், தொடர்ந்து முன்னேற அவர்கள் நமக்கு உதவியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக இப்போது, இந்த கடின உழைப்பாளர்களான மெக்கானிக்குகளுக்கு நமது ஆதரவு தேவை.


குறிப்பாக, பரவல் தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு, மெக்கானிக்குகள் மற்றும் அவர்களின் வணிகங்களது மீதும் கடினமாக உள்ளன. பலர் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதிலும், குறைக்கப்பட்ட வாகன பயன்பாடு மற்றும் உடல்நலக் கவலைகளால் அவர்களின் அடுத்தடுத்த மீட்பு நிலுவையிலே உள்ளது. இது மெக்கானிக்குகளின் தற்போதைய வருமானத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. மேலும் இது, அவர்களின் எதிர்கால வாய்ப்புகளையும் அச்சுறுத்துகிறது. நாம் எப்போதும் தடையின்றி முன்னேறிச் செல்ல, உதவிய மெக்கானிக்குகளின்றி இந்திய பயண அனுபவங்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது.

Castrol Activ சில ஆண்டுகளாகவே, மெக்கானிக்குகளின் நலன் மற்றும் வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர்களின் முன்னணி உடைமை Castrol Super Mechanic , இந்தியா முழுவதும் கார் மற்றும் பைக் மெக்கானிக்குகளுக்கு , அவர்களின் திறமைகளை சோதிக்கவும், அவர்களின் அறிவையும் திறமையையும் காண்பிப்பதன் மூலம்  தேசிய அளவில் அங்கீகாரத்தைப் பெறவும் ஆதரிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், Castrol இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மெக்கானிக்குகளிடமிருந்து பெரும் பங்களிப்பைக் கண்டது. இவ்வாறு, அங்கீகரிக்கப்பட வேண்டும்,திறன் மேம்பட வேண்டும் என விரும்பும் மெக்கானிக்குகளின் விருப்பத்தை Castrol உறுதிப்படுத்துகிறது.

ஆனால், தற்பொழுது காலம் மாறிவிட்டது. மெக்கானிக்குகளை ஆதரிக்கும் விருப்பத்தால், Castrol Activ மற்றும் Network18 ஆகியவை இணைந்து #ProtectIndiasEngine பிரச்சாரத்தைத் தொடங்குகின்றன. இப்பிரச்சாரப் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு அணிதிரட்டு அழைப்பாகும். மெக்கானிக்குகள் மீதான நமது  அன்பு,அக்கறை அனைத்தையும் திரட்டவும், அவர்களுக்கு நமது ஆதரவை அளிக்க  ஒரு தளத்தையும் வழங்குகிறது. இந்த பணியில் நமக்கு உதவ,பாலிவுட் நட்சத்திரம், ஆயுஷ்மான் குர்ரானா பிரச்சாரத்தின் தலைமையை தாங்குகிறார். ஒரு புகழ்பெற்ற இளைஞர் சின்னமாக உயர்ந்து வருகிற, ஆயுஷ்மான் குர்ரானா பல ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர். முக்கியமான தருணங்களில் மெக்கானிக்குகள் தனக்கும் உதவிய  கதைகளை ஆயுஷ்மான் குர்ரானா பகிர்ந்து கொண்டார்.தென்னிந்தியாவிலிருந்து நன்கு அறியப்பட்ட நடிகர்கள் - ஷைன் ஷெட்டி மற்றும் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் பிரபலமான இந்தி நடிகர் ரவி துபே ஆகியோர் பிரச்சாரத்திற்கு பெருமளவில் கூடுதல் ஆதரவை சேர்க்கின்றனர்.

அவர்களின் செய்தி மிகவும் எளிமையானதே. நமது வாகனங்களுக்கு இடைவிடாத பாதுகாப்பை வழங்க பல ஆண்டுகளாக உதவிய நமது மெக்கானிக்குகளை பாதுகாக்கவும் #ProtectIndiasEngine, அவர்களுக்கு நமது ஆதரவை வழங்கவும் இதுவே உகந்த நேரம். ஆதரவை தரும் செயல் இரண்டு நிமிட பணியாக இருந்தாலும்,அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெறப்பட்ட ஒவ்வொரு ஆதரவுகும், தலா பத்து ரூபாய் வீதம், Castrol Activ மொத்தம் ஐம்பது லட்சம் ரூபாய் வரை பங்களிக்கிறது.இந்த பணம்,நமது மெக்கானிக்குகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான வணிக நடைமுறைகள் மற்றும் தொழில்துறை போக்குகள் பற்றிப் பயிற்றுவித்தல், திறன் மேம்படுத்துதல் மற்றும் ஈடுபடுத்துதல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.

தங்கள் ஆதரவை வழங்க, வாடிக்கையாளர்கள், www.protectindiasengine.com சென்று பிளெட்ஜ் பொத்தானை அழுத்தவும். மாற்றாக, நீங்கள் 7574-003-002 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆதரவு வழங்க இயலும். நமது முயற்சியான #ProtectIndiasEngine வை நிஜமாக்க வேண்டிய நேரம் இது.

இது ஒரு கூட்டு செயல்பாடு.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading