புதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..!

புதிய லோகோ வடிவமைப்புடன் வோக்ஸ்வேகனின் முதல் காராக 8ம் தலைமுறை கோல்ஃப் கார் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

Web Desk | news18
Updated: August 24, 2019, 10:49 PM IST
புதிய லோகோ தயார்... மாற்றத்துக்குத் தயாராகும் வோக்ஸ்வேகன்..!
தற்போதைய வோக்ஸ்வேகன் லோகோ (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: August 24, 2019, 10:49 PM IST
புதிய லோகோ உடன் புதிய மாற்றத்துக்கு வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் தயாராகி உள்ளது.

2019 ஃப்ராங்க்பர்ட் மோட்டார் நிகழ்வில் வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய ஐடி 3 எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காருடன் புதிய லோகோவும் இந்த கண்காட்சியில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முழுமையான முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இந்த ஐடி 3 கார் இருக்கும்.

வோக்ஸ்வேகன் மேலும் இளமையாக, டிஜிட்டல் மயமாக, நவநாகரீகமானதாக மாறியதை அறிவிக்கும் வகையில் ‘புதிய வோக்ஸ்வேகன்’ ஆக லோகோ வடிவமைப்பு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த லோகோ வடிவமைப்புக்கு மட்டும் சுமார் 3 ஆண்டுகள் ஆனதாம்.


புதிய லோகோ வடிவமைப்புடன் வோக்ஸ்வேகனின் முதல் காராக 8ம் தலைமுறை கோல்ஃப் கார் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. 2019-ன் இறுதியில் அறிமுகமாகி 2020-ன் தொடக்கத்தில் புதிய லோகோ உடனான கோல்ஃப் வெளிவரும் எனத் தெரிகிறது. புதிய லோகோ என்றாலும் V மற்றும் W ஆகிய இரு எழுத்துகள் மட்டும் மாறாது என வோக்ஸ்வேகன் உறுதி தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: விழாக் கொண்டாட்டத்துடன் இன்று வெளியானது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்!
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...