2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ள வோக்ஸ்வேகன்..!

விற்பனையை அதிகரிக்க வோக்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்ட தனது சில கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது.

2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ள வோக்ஸ்வேகன்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 15, 2019, 4:20 PM IST
  • Share this:
வோக்ஸ்வேகனின் குறிப்பிட்ட சில கார்கள் 2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 11 மாத வீழ்ச்சிக்குப் பின் கடந்த அக்டோபர் முதல்தான் மெல்ல முன்னேறி வருகிறது. விற்பனையை அதிகரிக்க வோக்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்ட தனது சில கார்களுக்கு 2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

வென்டோ, டிகுவான், அமியோ மற்றும் போலோ ஆகிய கார்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வென்டோ காருக்கு 2.60 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. இந்தக் காரின் விலை 9.9 லட்சம் ரூபாய் ஆகும். நடுத்தர செடான் ரக காரான வென்டோ மூன்று ரக என்ஜின்களைக் கொண்டுள்ளது. 105hp, 1.6- லிட்டர் பெட்ரோல் என்ஜின், 105hp, 1.2- லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், மற்றும் 110hp, 1.5- லிட்டர் டர்போ டீசல் என்ஜின்.


Tiguan காருக்கு 2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. எஸ்யூவி ரக காரான Tiguan 143hp, 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட டர்போ டீசல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அமீயோ காருக்கு 2.20 லட்சம் ரூபாயும், போலோ காருக்கு 2.15 லட்சம் ரூபாயும் தள்ளுபடி உள்ளது. போலோ ப்ரீமியர் ஹேட்ச்பேக் காருக்கு மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும்.

மேலும் பார்க்க: 1.69 விநாடிகளில் 100 கி.மீ வேகம்... அதிரும் விலையில் உலகின் அதிவேக கார்...!
First published: November 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading