ஊழலால் 5.5 பில்லியன் யூரோக்கள் அபராதம் - சிக்கலில் வோக்ஸ்வேகன்

ஊழல், மோசடி என அபராதங்களால் திணறி வருகிறது வோக்ஸ்வேகன் நிறுவனம்.

ஊழலால் 5.5 பில்லியன் யூரோக்கள் அபராதம் - சிக்கலில் வோக்ஸ்வேகன்
வோக்ஸ்வேகன்
  • News18
  • Last Updated: December 23, 2018, 7:11 PM IST
  • Share this:
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு விதிமுறையில் செய்த மோசடியால் 2018-ம் ஆண்டுக்கு மட்டும் 5.5 பில்லியன் யூரோக்களை அபராதமாக செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

மாசு உமிழ்வுக்கு என சில விதிமுறைகள் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இது அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் விதிமுறையாகும். ஆனால், ஜெர்மனியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு உமிழ்வு விவகாரத்தில் மோசடி செய்திருப்பதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்தும், முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்தும் பல புகார்களைப் பெற்று வருகிறது.

விதிமுறையை மீறி மோசடி செய்த வோக்ஸ்வேகன் அரசுக்கு அபராதம் செலுத்திக் கொண்டேதான் உள்ளது. ஆனால்,  வழக்குத் தொடர்ந்து வரும் முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அந்நிறுவனம்.


ஊழல் குற்றச்சாட்டால் அபராதம், நஷ்ட ஈடு என 2018-ல் மட்டும் 5.5 பில்லியன் யூரோக்களை செலவிட உள்ளது வோக்ஸ்வேகன். கார் தயாரிப்பில் தனது இடத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் வோக்ஸ்வேகன், 2019-ல் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 2 பில்லியன் யூரோக்களாக இருக்கலாம். இந்த தொகை 2020-ல் ஒரு பில்லியன் யூரோக்களாக உயரலாம் என்று கருதப்படுகிறது.

2015-ல் இருந்து இதுவரையில் வோக்ஸ்வேகன் நிறுவனம் சுமார் 27 பில்லியன் யூரோக்களை நஷ்ட ஈடாகவும் அபராதமாகவும் மட்டுமே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பசு மாடுகள் திருட்டு... இந்து முன்னணி நிர்வாகி கைது
First published: December 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்