இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்- சர்வதேச விருதை வென்ற டாடா-வின் கார் எது?

’டாடா-வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற வாகன உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு அம்சங்களை மெருகேற்ற வேண்டும்'

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்- சர்வதேச விருதை வென்ற டாடா-வின் கார் எது?
டாடா
  • News18
  • Last Updated: January 15, 2020, 7:42 PM IST
  • Share this:
இந்தியாவின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த ஹேட்ச்பேக் காராக டாடாவின் கார் ஒன்று சர்வதேச விருதை வென்றுள்ளது.

சர்வதேச NCAP, கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும். விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் காருக்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 மதிப்பெண்ணும் இந்தக் காருக்குக் கிடைத்துள்ளது. பெரியவர்களுக்கு இருக்கை வசதிகள் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிக்கு வலி ஏற்படுத்தாதவாறு அமைக்கப்பட்டுள்ளதற்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளது. இந்தக் காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள் உள்ளன.


NCAP சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ டேவிட் வார்டு கூறுகையில், “இந்தியாவில் டாடா-வின் பாதுகாப்பு சிறப்பம்சங்களுக்குக் கிடைத்த பெருமை இந்த மதிப்பெண். டாடா-வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற வாகன உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு அம்சங்களை மெருகேற்ற வேண்டும் என்றார்.

மேலும் பார்க்க: இரண்டு பைக்குகளுக்கு ‘குட்பை’ சொல்கிறது ராயல் என்ஃபீல்டு!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading