இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் ஹூண்டாய்-க்கு முதலிடம்!

ஹூண்டாய் ஆன்லைன் அல்லது ஷோரூம்களில் 11ஆயிரம் ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் ஹூண்டாய்-க்கு முதலிடம்!
ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்
  • News18
  • Last Updated: August 13, 2019, 2:20 PM IST
  • Share this:
இந்தியாவின் அதிகப்படியான மைலேஜ் தரும் டாப்-1 கார் குறித்த ரேங்கிங் பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட மெகானிஸம் மட்டுமல்லாமல் அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் நம்பர் 1 கார் என்ற பெயரைப் பெற்றுள்ளது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ். இம்மாத இறுதியில் வெளியாக உள்ள இந்தக் காரின் எரிபொருள் திறன் குறித்த தகவல்கள்தான் தற்போது லீக் ஆகி உள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் கார் உள்ளது. டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீ கிடைக்கிறது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜ் 26.2 kmpl என்ற ரீதியில் உள்ளது. இதேபோல், பெட்ரோல் ரக i10 நியோஸ் காரின் மேனுவல் ரகம் 20.7 kmpl என்ற ரீதியிலும் ஆட்டோமேட்டிக் ரகம் 20.5 kmpl என்ற ரீதியிலும் மைலேஜ் தருகிறது.


ஹூண்டாய் தனது i10 ரகத்தின் மூன்றாம் தலைமுறைக் காராக புதிய க்ராண்ட் i10 நியோஸ் காரை களம் இறக்குகிறது. முந்தைய i10 கார்களைவிட மாற்றி வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட், எல்இடி DRLs என அசத்துகிறது புதிய க்ராண்ட் i10 நியோஸ். சில்லவுட் வடிவமைப்பு வழக்கம்போல் ஹூண்டாய் தனித்துவத்துடன் ஹூண்டாய் வெர்னாவின் தோற்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

இம்மாத இறுதியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் இன்று முதல் க்ராண்ட் i10 நியோஸ் காருக்கான முன்பதிவு தொடங்குகிறது. ஹூண்டாய் ஆன்லைன் அல்லது ஷோரூம்களில் 11ஆயிரம் ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading