சிறப்பு சலுகை விலையில் வெளியாகும் எலெக்ட்ரிக் மாருதி Wagon R!

தோராயமாக சுமார் 1.3 லட்சம் வரையில் மாருதியின் எலெக்ட்ரிக் Wagon R காருக்கு மானியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: February 22, 2019, 11:59 AM IST
சிறப்பு சலுகை விலையில் வெளியாகும் எலெக்ட்ரிக் மாருதி Wagon R!
(Image: Abhinav Jakhar/News18.com)
Web Desk | news18
Updated: February 22, 2019, 11:59 AM IST
அதிரடியான சிறப்புச் சலுகை விலையுடன் மாருதி Wagon R எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது மாருதி நிறுவனம்.

Wagon R எலெக்ட்ரிக் வாகனத்தை 7 லட்சம் ரூபாய்க்குள் பட்ஜெட் பேக்கேஜாக அறிமுகம் செய்யவே மாருதி நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கப்படும் மானியம் இந்த சலுகையில் அடங்கும் எனக் கூறப்படுகிறது.

தோராயமாக சுமார் 1.3 லட்சம் வரையில் மாருதியின் எலெக்ட்ரிக் Wagon R காருக்கு மானியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கி.மீ தூரம் வரையில் பயணிக்கும் திறன் கொண்டதாக Wagon R எலெக்ட்ரிக் இருக்கும். இ-Wagon R டெஸ்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய சாலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடு இவ்வாகனம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அறிமுகமாக உள்ள எலெக்ட்ரிக் Wagon R மாடல் முன்னதாகவே ஜப்பானில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்காக குருகிராம் தொழிற்சாலையில் புதிய எலெக்ட்ரிக் Wagon R தயாரிப்புப் பணிகள் கணஜோராக நடைபெற்று வருகின்றன.

மேலும் பார்க்க: தேர்தலில் எனது கூட்டணி மக்கள் உடன் தான்: கமல்ஹாசன்
First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...