2020 முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே!- டொயோட்டா அதிரடி!

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா வருகிற 2025-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களை சந்தையில் இறக்கிவிட குறிக்கோள் வைத்துள்ளது.

2020 முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே!- டொயோட்டா அதிரடி!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: June 10, 2019, 10:42 AM IST
  • Share this:
2020-ம் ஆண்டு முதல் தனது தயாரிப்புகள் அனைத்தும் எலெக்ட்ரிக் கார்களாக மட்டுமே இருக்குமென டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எதிர்காலம் மிகவும் பிரகாசமாகவே உள்ளது. பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டன. ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் முன்னோடிய விளங்கும் டொயோட்டா நிறுவனம் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை முழுவீச்சில் முன்னெடுக்க உள்ளது.

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா வருகிற 2025-ம் ஆண்டுக்குள் புதிதாகப் பத்து எலெக்ட்ரிக் கார் மாடல்களை சந்தையில் இறக்கிவிட குறிக்கோள் வைத்துள்ளது. இதுகுறித்த செய்தி அறிக்கையில், “BEV என்னும் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் பிரபலப்படுத்துவதில் பல வேலைகள் உள்ளன.


வாகன தரத்தை முன்னெடுப்பதிலும் பேட்டரி மறுபயன்பாடு செய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்” என்றுள்ளது டொயோட்டா.

மேலும் பார்க்க: 2026-ம் ஆண்டு முதல் ஓலா, உபெரில் மின்சாரக் கார்களுக்கு மட்டுமே அனுமதி!
First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்