ஸ்கோடா, ஹோண்டாவுக்கு ‘செக்’ வைக்கும் டொயோட்டா கேம்ரி!

செடான் ரக சொகுசு கார்களுக்குப் போட்டியாக உள்ளது கேம்ரியின் வருகை.

Web Desk | news18
Updated: December 30, 2018, 5:27 PM IST
ஸ்கோடா, ஹோண்டாவுக்கு ‘செக்’ வைக்கும் டொயோட்டா கேம்ரி!
டொயோட்டா கேம்ரி
Web Desk | news18
Updated: December 30, 2018, 5:27 PM IST
புதிய நியூ-ஜென் கேம்ரி செடான் ரக சொகுசுக் காரை ஜனவரி 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது டொயோட்டா நிறுவனம்.

சர்வதேச அளவில் டொயோட்டாவின் எட்டாம் தலைமுறைக் காராக ‘கேம்ரி’ களம் இறங்குகிறது. ஆனால், இந்தியாவில் டொயோட்டாவின் நான்காம் தலைமுறை செடான் ரக சொகுசுக் கார் பயன்பாட்டில் உள்ளது. புது அறிமுகத்துக்காக கேம்ரி குறித்த ஒரு டீசரையும் டொயோட்டா வெளியிட்டுள்ளது. முந்தைய டொயோட்டா செடான்களை விட முற்றிலும் புத்தம் புதிய வெளிப்புறத் தோற்ற வடிவமைப்பு பெற்றுள்ளது கேம்ரி.

லெக்சஸ் ES செடானை அடிப்படையாக வைத்தே டொயோட்டாவின் கேம்ரியின் உள்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக 2.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. கேம்ரியின் டர்க் வெளியீடு 221 Nm ஆக உள்ளது. கேம்ரி ஒரு ஹைப்ரிட் ரகம் என்பதால் 116 bhp எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ரூஃப் ஸ்கிரீன், infotainment system, ஆப்பிள் கார்ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ என அசத்தலான உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது கேம்ரி.

மேலும் பார்க்க: எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானம் செய்த இளைஞர் உயிரிழப்பு!
First published: December 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...