இந்தியாவுக்கான முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டுவந்த டாடா..!

30 நகரங்களில் Tigor EV விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனது விலை 9.44 லட்சம் ரூபாய் ஆகும்.

Web Desk | news18
Updated: October 10, 2019, 1:00 PM IST
இந்தியாவுக்கான முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டுவந்த டாடா..!
டாடா டிகோர்
Web Desk | news18
Updated: October 10, 2019, 1:00 PM IST
இந்தியாவுக்கான முதல் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

டாடா நிறுவனம் தனது முதல் எல்க்ட்ரிக் Tigor EV காரை அரசு மற்றும் பெரும் வணிக ரீதியான நிறுவனங்களுக்காக மட்டும் அறிமுகம் செய்தது. தற்போது வாடிக்கையாளர்களை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான Tigor EV காரை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

XE+, XM+ மற்றும் XT+ ஆகிய மூன்று ரகங்களில் Tigor EV உள்ளது. வணிக ரீதியிலான மற்றும் சுயதேவைக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த மூன்று ரக கார்களும் விற்பனைக்கு வரும். தொடக்க விற்பனையாக 30 நகரங்களில் Tigor EV விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனது விலை 9.44 லட்சம் ரூபாய் ஆகும்.


DC 15 kW சார்ஜர் பொருத்தப்பட்டுள்ள 21.5 kWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 90 நிமிடங்களில் சுமார் 80 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும். சமீபத்தில் அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்ததால் Tigor EV காரின் விலையும் குறைந்துள்ளது. Tigor EV-க்கு மூன்று ஆண்டுகளுக்கான வாரண்டி கொடுக்கப்படுகிறது.

மேலும் பார்க்க: தொடர்ந்து எட்டாம் மாதமாக உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!

100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பெண் தொழிலதிபர் மது சரண்

Loading...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...