சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் கார் ‘டாடா நெக்ஸான்’!

டாடா நெக்ஸான் எஸ்யூவி NCAP ரேங்கிங்-ல் ஐந்து ஸ்டார் பெற்ற முதல் இந்திய காராகப் புதிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: December 8, 2018, 12:45 PM IST
சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் கார் ‘டாடா நெக்ஸான்’!
டாடா நெக்ஸான் எஸ்யூவி NCAP ரேங்கிங்-ல் ஐந்து ஸ்டார் பெற்ற முதல் இந்திய காராகப் புதிய அங்கீகாரம் பெற்றுள்ளது.
Web Desk | news18
Updated: December 8, 2018, 12:45 PM IST
சர்வதேச அங்கீகாரமான NCAP ரேட்டிங்-ல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காரும், ஐந்து ஸ்டார் பெறும் நிரூபித்துள்ளது டாடா நிறுவனத்தின் டாடா நெக்ஸான்.

’இந்தியாவுக்கான பாதுகாப்புமிக்க கார்கள்’என NCAP (புதிய கார்களுக்கான மதிப்பீடு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு ஐந்துக்கு ஐந்து ஸ்டார் பெற்று அசத்தியுள்ளது டாடா-வின் ந்நெக்ஸான் எஸ்யூவி. இந்தியாவில் தயாரான கார் ஒன்றுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல்முறை.

பெரியோர் மற்றும் சிறியோர் என அனைவருக்குமான பாதுகாப்புமிக்க கார் ஆகவும் டாடா நெக்ஸான் NCAP வைத்தத் தேர்வில் தேர்வாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே டாடா நெக்ஸான் NCAP தேர்வில் 4 ஸ்டார்கள் மட்டுமே பெற்றிருந்தது.

ஆனால், இந்தாண்டுக்கான தேர்வில் பல அப்டேட்களுடன் மீண்டும் களம் இறங்கி புது அங்கீகாரம் பெற்றுள்ளது. டிரைவர் மற்றும் பயனிகள் இரு தரப்பினருக்குமான பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலான தேர்விலும் டாடா நெக்ஸான் தேர்வுக் குழுவினரின் பாராட்டுகளை அள்ளியுள்ளது.

இதுகுறித்து க்ளோபல் NCAP பொதுச் செயலாளர் டேவிட் வார்ட் கூறுகையில், “இந்தியாவில் கார் பாதுகாப்பில் டாடா நெக்ஸான் சாதனை பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எனது வாழ்த்துகள். பெரியோர்களுக்கான பாதுகாப்பு அம்சத்தில் ஐந்து ஸ்டார் பெற்றுள்ளது டாடா.

நெக்ஸான் மூலம் இந்தியாவில் தயாராகும் ஒரு காரும் சர்வதேச சாதனைப் படைக்கும் என டாடா நிரூபணம் செய்துள்ளது. இதுபோல் பல இந்திய கார்கள் சர்வதேச அங்கீகரங்களைப் பெற வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் பார்க்க: 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
Loading...
First published: December 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...