2020 உடன் பயணத்தை முடித்துக்கொள்ளும் டாடா நானோ!

10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் விலை குறைவான கார் ஆக டாடா நானோ அறிமுகமானது.

Web Desk | news18
Updated: January 28, 2019, 1:45 PM IST
2020 உடன் பயணத்தை முடித்துக்கொள்ளும் டாடா நானோ!
நானோ (Image: Tata)
Web Desk | news18
Updated: January 28, 2019, 1:45 PM IST
உலகின் மிகவும் விலை குறைவான கார் என்ற டேக் உடன் அறிமுகமான டாடா நானோ கார் தனது பயணத்தை 2020-ம் ஆண்டுடன் நிறைவு செய்துகொள்ள உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மிகவும் விலை குறைவான கார் ஆக டாடா நானோ அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான டாடா, தனது நானோ காரின் உற்பத்தியையும் விற்பனையையும் வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவு செய்துகொள்வதாக அறிவித்துள்ளது.

புதிய பாதுகாப்பு மற்றும் மாசு வெளியேற்றக் கொள்கையினை நானோவில் செயல்படுத்த அதிக செலவு ஆகும் என்பதால் நானோவின் உற்பத்தியையே நிறுத்துகிறது டாடா.

வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு நானோ கார் 4 பேர் பயணிக்கும் வகையில் கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமானது. பட்ஜெட் கார் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் நீண்ட கால கனவை நிறைவேற்றும் வகையில் நானோ உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகின் விலை குறைவான கார் என்று அறிமுகம் ஆனபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது நானோ.

ஆனால், எதிர்பார்த்த அளவு நானோவின் விற்பனை சூடுபிடிக்கவில்லை. இந்நிலையில் புதிய அப்டேட்களுக்காக செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் உற்பத்தி மற்றும் விற்பனையை டாடா நிறைவு செய்கிறது.

Also See...

First published: January 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...