1 லட்சம் நெக்சான் கார்களை விற்று டாடா மோட்டார்ஸ் சாதனை..!

சர்வதேச அளவில் கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் அடிப்பையிலான தேர்விலும் முழு மதிப்பெண் பெற்ற ஒரே காராக டாடா நெக்சான் உள்ளது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 5:02 PM IST
1 லட்சம் நெக்சான் கார்களை விற்று டாடா மோட்டார்ஸ் சாதனை..!
டாடா நெக்சான்
Web Desk | news18
Updated: July 20, 2019, 5:02 PM IST
இந்தியாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் கார்களில் நெக்சான் கார் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளன.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்திய கார்களுள் ஒன்று நெக்சான். மாதம் 4 ஆயிரம் யூனிட்கள்(வாகனங்கள்) விற்பனையாகி நெக்சான் சாதனை படைத்து வந்தது. சமீபத்தில் டாடா-வின் ரஞ்சன்கோன் தொழிற்சாலையிலிருந்து 1 லட்சமாவது யூனிட் விற்பனையாகி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

டாடா நெக்சான் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. அதன் பின்னர் பல சிறப்பு பதிப்புகளை டாடா வெளியிட்டது. க்ராஸ், ஏரோ மற்றும் ஐபிஎல் ஆகிய மூன்று சிறப்புப் பதிப்புகள் நெக்சானின் கீழ் வெளியானது. தொடர்ந்து வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையிலும் இருப்பதுதான் நெக்சானின் வெற்றி எனக் கூறப்படுகிறது.


சர்வதேச அளவில் NCAP என்ற கார்களுக்கான தேர்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார் வாங்கிய ஒரே இந்திய கார் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது டாடா நெக்சான். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச கவன ஈர்ப்பையும் டாடா மோட்டார்ஸ் பெற்றது.

இதேபோல், சர்வதேச அளவில் கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் அடிப்பையிலான தேர்விலும் முழு மதிப்பெண் பெற்ற ஒரே காராக டாடா நெக்சான் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ரகங்களும் உள்ளன.

மேலும் பார்க்க: ஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...